செஞ்சோலை வளாகம் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன் முழு வடிவம் வருமாறு:- 14/08/26பாரிசு
மேலும்சுதுமலை பிரகடனம்.இன்றோடு 39 ஆண்டுகள்
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டது போல, இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.இதன் விளைவுகள் எமக்கு சாதகமாக அமையுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல், இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அவசரஅவசரமாக அமுலாக்கப்பட்டுவருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
மேலும்கவனயீர்ப்பு போராட்டம்
தமிழீழக்கிண்ணம் 2026 சுவிஸ்
கவனயீர்ப்பு போராட்டம் – ஜெனிவா
பிரான்சில் பாராளுமன்றப் பகுதியில் இடம்பெற்ற கறுப்பு யூலை கவனயீர்ப்பு நிகழ்வு
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் நாள் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 43 ஆம் ஆண்டு நினைவு மற்றும் செம்மணி புதைகுழியினைக் கண்டித்த கவனயீர்ப்பு நிகழ்வு இன்று 25.07.2026 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சில் பாரிஸ் நகரில் பிரெஞ்சுபா பாராளுமன்றம் அமைந்துள்ள Invalides பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு அரசியற்றுறை மற்றும் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்த ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
மேலும்சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை!
இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஒரு அங்கமே கறுப்பு யூலை.
மேலும்தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2026 -சுவிஸ்
தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளை 35 வது தடவையாக நடத்திய தமிழீழ தேசியமாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 04.07.2026 தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளை 35 வது தடவையாக நடத்திய தமிழீழ தேசியமாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 04.07.2026 சனி அன்று சப்கவுசன் மாநிலத்திலும் , மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி ஞாயிறு அன்று பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்ப் மைதானத்திலும் சிறப்பாக நடைபெற்றது.. பொதுச்சுடர், தேசியக்கொடி,ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தி மலர் வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.காலையில் தொடங்கிய போட்டிகள் மாலை வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
மேலும்சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கேணல் சங்கர்நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2026!(மென்பந்து துடுப்பாட்டம், வளர்ந்தோர் உதைபந்தாட்டம்)
26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 07.06.2026 அன்று பேர்ண் மாநிலத்தில் றுயமெனழசக மைதானத்தில் நடைபெற்றது.
மேலும்