நியூசிலாந்து ஆக்கிலாண்டில் இளையோர்கள் மற்றும் மாவீரர் குடும்பங்களின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2026.

1 0
Read Time:2 Minute, 26 Second

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களுடைய உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்கள் மாமனிதர்கள் நாட்டுப் பற்றாளர்கள் மற்றும் எல்லைப்படை வீரர்கள் அனைவரையும் நினைவு கூறும் நிகழ்வு இடம் பெற்றது.

மாலை 5.30 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டது .பொதுச் சுடரினை 2 ம் லெப்டினன் குயிலன் அவர்களின் தந்தையார் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து கொடியினை மாமனிதர் சிவாஜிலிங்கத்தின் உறவினர் சுமதி ரஞ்சிதலிங்கம் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை 2ம் லெப்ரினன் இளங்குயில் அவர்களின் சகோதரியின் மகன் ஏற்றி வைத்தார் .

மாலை 5.30மணிக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையிலிருந்து சில முக்கியமான பகுதிகள் ஒலிபரப்பப்பட்டன .

மாலை 6.05 மணிக்கு மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டது.
மாலை 6.06 மணிக்கு அகவணக்கம் இடம் பெற்றது .
மாலை 6.07 மணிக்கு பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. சம நேரத்தில் அனைத்து மாவீரர்களுக்குமான நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டன.
பிரதான ஈகை சுடரினை 2ஆம் லெப்டினன் விஜய் அவர்களின் தாயார் ஏற்றி வைத்த தார்.

அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றது . தொடர்ச்சியாக கொடி கையற்ற நிகழ்வு இடம் பெற்றது முறையே நீயூசிலாந்து தேசிய கொடியினை இளைளையோர் அமைப்பின் உறுப்பினர் ஜெயந்தன் அவர்கள் கையேற்றி வைத்தார்.
தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை
இளையோர் அமைப்பின் உறுப்பினர் ரணேஸ் அவர்கள் கையேற்றி வைத்தார்.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற ஈழத்து கோசப் பாடலுடன் நிறைவு பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment