Read Time:1 Minute, 0 Second
கார்த்திகை பெற்ற வரம்
காலம் செய்த தவம்
ஞாலம் வியக்கும் திறம்
ஆளும் தமிழின் மறம்
அண்ணன் பெயர் வேதம்
அன்னைத்தமிழ் நாதம்
உண்மைப் பெருவீரம்
உரிமை ஒளி ஈகம்
சொல்லும் சொல் செயலாய்
வெல்லும் படை அழகாய்
நல்லவன்
வந்துதித்தான்
வல்லவன்
வழிபடைத்தான்
எம்தமிழ் ஏற்றம்செய்தான்
எண்ணிட
மாற்றம் செய்தான்
கண்ணியம்காத்துநின்றான்
காவலன் அவனே ஆனான்
அண்ணனைப்போலொருவர் -இந்த
அவனியில் இல்லைக்காண்
தன்னலமற்றதோர்
தலைமகன்
எமக்கென வாய்த்ததோர்
திருமகன்
உறுதிதந்து நிதம் திடமுரைக்கும்அரனே
ஓர்மங்கொண்டோம் எம்
உரிமைகள்மீட்டாள்வோம்
அரணாகும் அண்ணன் நாமம்
விடுதலை வேதமேயாம்.
கலைமகள்
26.11.2026
