வட மாகாண சபை அமர்வில் நேற்று புயலுக்கு பின்னதான அமைதி நிலவியது

பல்வேறு அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டுக்கு பின்னதாக பாரிய எதிர்பார்ப்புடன் நேற்று ஆரம்பமாகிய வட மாகாண சபை அமர்வில், புயலுக்கு பிந்திய அமைதிபோல் சபை அமர்வு கள் குழப்பத்துக்கு இடம்கொடாது அமைதியாக நடந்தேறின.

தமிழ் மக்கள் உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுவர்

தமிழனுக்கு தமிழனே பகையாகிவிட்ட நிலையில் தமிழ் மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற ஏக்கம் பலரிடமும் இருக்கவே செய்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் பாவமன்னிப்பு வழங்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் அவர்களை நம்பி வாக்களித்தனர்.

பூநகரி – மன்னார் வீதியை மறித்து போராட்டத்தில் குதித்தனர் இரணைதீவு மக்கள்.

கடற்படையினர் வசமுள்ள தமது பூர்வீக நிலமான இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வந்த, மக்களுக்கான பதிலை அரசாங்கம் வழங்காத நிலையில், இன்று அப்பகுதிமக்கள் பூநகரி -மன்னார் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் – சுமந்திரன்

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலை புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு! எதிர்த்து வாக்களிக்க உறவுகள் கோரிக்கை

வடக்கு கிழக்கு  மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.