பெண்களின் ஆளுமையைச் சரியாகத் தெரிந்து கொள்ளத் தொடங்கிவிட்ட சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சொல்லால் அல்ல எமது தீரச்செயல்களால் பெண்களுள்ளே மறைந்து கிடக்கின்ற ஆற்றலை புரியவைப்பதனூடாக பெண்களின் தனித்துவத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றோம். தேசிய ரீதியான அடக்குமுறையால் மட்டுமல்லாமல் சமூக ரீதியான ஒடுக்குமுறைக்குள்ளும் அகப்பட்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்ற பெண்களின் விடுதலைக்காக குரல் எழுப்புவதோடு நின்றுவிடாமல் எமது விடுதலையை வென்றெடுக்க நாம் தான் போராட வேண்டும் என்பதில் உறுதியாக நின்று போராடிக் கொண்டிருக்கின்றோம்.
மேலும்கப்டன் செம்மலையான்
கால் நடைகள் சுட்டுக் கொல்லப்பட்டன
இன்று காலையிலும் மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையில் வாய் பேச முடியாத கால்நடைகள் சட்டவிரோத சிங்கள குடியேற்றவாசிகளால் துடிக்கத் துடிக்க சுடப்பட்டுள்ளன
மேலும்2ம் லெப்.மாலதி நினைவு சுமந்த பெண்களிற்கான உள்ளரங்க விளையாட்டுப்போட்டி 2026 – சுவிஸ்
தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெண் மாவீரர்இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் 39ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு தமிழீழவிளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் கடந்த 11.10.2026 அன்று முதற் தடவையாகமகளிருக்கான உதைபந்தாட்டம்இகரப்பந்தாட்டம்இபூப்பந்தாட்டம் போன்ற போட்டிகள்நடத்தப்பட்டது காலை பத்து மணிக்கு ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற சுற்றுப்போட்டியில் மகளிர் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.காலை பத்து மணிக்கு ஆரம்பமான போட்டிகள் மாலை 18.30 இக்கு தாரக மந்திரத்துடன்நிறைவு பெற்றது.
மேலும்வீரம் விதைத்ததளபதி விக்டர்
மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களது 40ஆம் ஆண்டு நினைவு வணக்கநாள்,
அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மன்னார் மாவட்ட பிராந்தியத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின்40ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.
மேலும்அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2026
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம், 25ஆவது முறையாக ஐரோப்பிய நாடுகளில் நடத்திய தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுகத் தேர்வு, 2026 ஒக்டோபர் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் நடைபெற்றது.
மேலும்சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும்,முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதிஉட்பட நான்கு மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும்!
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதிஉட்பட நான்கு மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும் லுட்சேர்ன் மாநிலத்தில் 10.10.2026 சனி அன்று நினைவுகூரப்பட்டது.
மேலும்யாழ் கோப்பாயில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2 ஆம் லெப்.மாலதி அவர்களின் 39-ஆம் ஆண்டு நினைவேந்தல்!முதல் பெண் மாவீரரான மாலதியின் நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு
மண்ணின் உரிமைக்காகத் தன் இளமைக் காலத்திலேயே தன்னுயிரை ஈகம் செய்த முதல் பெண் மாவீரரான மாலதி என அழைக்கப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் 10.10.2026 காலை 9:15 மணி அளவில் யாழ்ப்பாணம், கோப்பாய் – கைதடி வீதியில் அவர் வீரச்சாவடைந்த இடத்தில் இடம்பெற்றது.
மேலும்முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட நான்கு மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
நாவற்குழிப் படைத்தளத்திலிருக்கும் இந்திய இராணுவம் முன்னேறினால் மோதவென கோப்பாயில் பதினைநது பேர் கொண்ட பெண்களணி தயாரானது. கைகளில் இரண்டொரு நாட்களின் முன் அவசர அவசரமாக வழங்கப்பட்ட AK 47, ஒரேயொரு ரவைக்கூட்டுடன் அதுகூட எல்லோரிடமுமில்லை.
மேலும்