சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டதமிழீழ விடுதலையின் தடையகற்றிகள் வணக்கநிகழ்வு!

0 0
Read Time:2 Minute, 49 Second

தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வானது ஞாயிறு அன்று பாசல் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்காக் கடற்படையால் பிடிக்கப்பட்டு, பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச்சதியினை முறியடித்து, சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப்; கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ, பிரான்சு நாட்டில் சிறிலங்கா அரசின் கைக்கூலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின்; நினைவுகள் சுமந்த இவ்வெழுச்சி நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம், மலர்;வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் வணக்கப் பாடல்களும்; காணிக்கையாக்கப்பட்டன.

மாவீர வித்துக்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வில் எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள், நினைவுரை போன்றவற்றுடன் சிறப்புரையும் இடம்பெற்றது.

நிகழ்வின்இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி கையேற்கப்பட்டது. தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment