தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதி
உட்பட நான்கு மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும் லுட்சேர்ன் மாநிலத்தில் 10.10.2026 சனி அன்று நினைவுகூரப்பட்டது.
சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன் அகவணக்கம், சுடர்வணக்கம,; மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் பெண் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.
தாய்நாட்டின் விடுதலையோடு பெண்களின் விடுதலையையும் இலட்சியமாகக் கொண்டு, ஆயுதமேந்தி இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக வீரப்பெண்ணாக விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவுநாள், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவுகூரப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது.
மாவீரர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வில் எழுச்சிப்பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், கவிவணக்கம் மற்றும் நினைவுரைகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகள் மாவீரர்களின் நினைவுகளை மீட்டெடுப்பதுடன், தமிழீழப் பெண்களின் விடுதலை உணர்வையும் தியாக வரலாற்றையும் நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தன.
நிகழ்வின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் பாடல் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து து தமிழீழத் தேசியக்கொடி கையேற்கப்பட்டது. தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

































