யாழ் கோப்பாயில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2 ஆம் லெப்.மாலதி அவர்களின் 39-ஆம் ஆண்டு நினைவேந்தல்!முதல் பெண் மாவீரரான மாலதியின் நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு

0 0
Read Time:1 Minute, 25 Second

மண்ணின் உரிமைக்காகத் தன் இளமைக் காலத்திலேயே தன்னுயிரை ஈகம் செய்த முதல் பெண் மாவீரரான மாலதி என அழைக்கப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் 10.10.2026 காலை 9:15 மணி அளவில் யாழ்ப்பாணம், கோப்பாய் – கைதடி வீதியில் அவர் வீரச்சாவடைந்த இடத்தில் இடம்பெற்றது.

போராளி நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், மாவீரர் ஒருவரின் தாயாரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மாலதியின் நினைவாக மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இலங்கைத் தமிழர் ஆயுதப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரராக அடையாளப்படுத்தப்படும் மாலதி, 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தார்.

அவரது நினைவாக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment