அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2026

0 0
Read Time:4 Minute, 42 Second

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம், 25ஆவது முறையாக ஐரோப்பிய நாடுகளில் நடத்திய தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுகத் தேர்வு, 2026 ஒக்டோபர் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு, மொத்தம் 10 தேர்வு நிலையங்களில் இடம்பெற்றது. இரண்டாம் தரம் முதல் ஆற்றுகைத் தரம் மற்றும் நடுவாங்கத் தேர்வு வரையிலான பல்வேறு நிலைகளில் மாணவர்கள் பங்கேற்றனர். நடனம், பரதநாட்டியம், இசை, வாய்ப்பாட்டு, வயலின், வீணை, சுருதிப்பெட்டி, புல்லாங்குழல், மிருதங்கம் உள்ளிட்ட கலைத்துறைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்தத் தேர்வைச் சிறப்பாக நடத்துவதற்காக, சுவிட்சர்லாந்துத் தமிழ்க் கல்விச்சேவை, பிரான்ஸ் தமிழ்ச்சோலை தலைமைப் பணியகம், ஜேர்மனியின் கலை பண்பாட்டுக் கழகம் மற்றும் இத்தாலி தமிழ்ச்சோலை உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தன. நாடுகள் மட்டத்திலான ஒருங்கிணைப்புடன் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
தேர்வு நடுவர்களாக அனுபவம் வாய்ந்த இளம் தமிழ்க்கலை ஆசிரியர்கள், மூத்த தமிழ்க்கலை ஆசிரியர்கள், நாடுகள் மட்டத்திலான ஒருங்கிணைப்பாளர்கள், கல்விப் பணியகப் பொறுப்பாளர்கள் மற்றும் தேசியச் செயற்பாட்டாளர்கள் கடமையாற்றினர். குறிப்பாக, அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வில் ஆற்றுகைத் தரத்தை நிறைவு செய்த இளம் ஆசிரியர்கள் பிரதம மற்றும் துணை மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றியதுடன், தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றியிருந்தனர்.

தேர்வு சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வப் பணியாளர்களுக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

அறிமுகத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இம்மாத இறுதிப்பகுதி முதல் 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் நாடுகள் மட்டத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்க்கலையை ஆர்வத்துடன் கற்று இத்தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நிறுவனம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்குப் பக்கபலமாக இருந்து ஊக்கமளித்து வழிநடத்தும் பெற்றோர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியப் பணியின் ஒரு பகுதியாக, சுவிட்சர்லாந்துத் தமிழ்க் கல்விச்சேவையால் தொடங்கப்பட்ட அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனத்தின் செயற்பாடுகளுடன் இணைந்து பணியாற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளிடம் தமிழ்க்கலையை எடுத்துச் சென்று வளர்க்கும் ஆசிரியர்களின் கல்விப் பணிகள் மேலும் சிறக்கவும் நிறுவனம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது

நன்றி.
நாகராஜா விஐயகுமார் (சங்கர்)
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்.
11.10.2026

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment