மணிவண்ணன் Covid 19 நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெறுவதற்காக கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டார்.

0 0
Read Time:2 Minute, 30 Second

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் Covid 19 நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெறுவதற்காக இன்று மதியம் கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டார்.

கொரோனா பரவல் காரணமாக முடக்கப்படுகிறது யாழ்.நகர்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் காரணமாக இன்று மாலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் மாவட்டச் செயலாளர் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும். கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும்.

யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாள்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றன.

வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நடத்த அனுமதிக்கப்படும்.

உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.

யாழ்ப்பாணம் மாநகரில் மக்களின் தேவையற்ற நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment