யார் இந்த அருண் சித்தார்த் மைத்திரேயன்.?

0 0
Read Time:5 Minute, 2 Second

2017 இல் காக்கைதீவு பகுதியில் 79 G கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் யாழ்ப்பாண சிறைச்சாலையில் “2017.03.09 Jaffna MC Court 292/17” என்கிற வழக்கு இலக்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்த “அருண் சித்தார்த் மைத்ரேயன்” எனும் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கே அவர்களால் உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவ புலனாய்வு துறை உறுப்பினர் ஒருவரை சிங்கள ஊடகங்கள் ஊடக தமிழ் மக்களின் பிரதிநிதியாக அடையாளம் காட்ட இலங்கை இராணுவத்தினர் முயற்சித்து வருகிறார்கள்

“அருண் சித்தார்த் மைத்ரேயன்” என்கிற இந்த நபர் மீது கஞ்சா வழக்கிற்கு மேலதிகமாக மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் வயோதிப் பெண் ஒருவரிடம் 10 லட்சம் ரூபா அல்லது அதற்கு அண்மித்த தொகைப் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினார் என்று குற்றவியல் சட்ட வழக்கு ஒன்றும் பதியபட்டு இருக்கிறது

யாழ்ப்பாணம் சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வாழ்விடமாகவும் கொண்ட “அருண் சித்தார்த் மைத்ரேயன்” என்கிற மேற்குறித்த புலனாய்வு உறுப்பினர் ஆரம்பத்தில் குமார் குணரட்ணத்தின் தலைமையிலான முன்னிலை சோசலிச கட்சியில் செயல்பட்டு வந்தார். அதே நேரம் இவரின் தாயாரின் சகோதரர்கள் இந்தியா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் உறுப்பினர்கள் என சொல்லப்படுகின்றது

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் மைத்திரிபால சிறிசேனா , யாழ்ப்பாணம் வந்து இருந்த திரு ரணில் விக்ரமசிங்கே மற்றும் சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன போன்ற பிரமுகர்களை சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளையும் “அருண் சித்தார்த் மைத்ரேயன்” அவர்களுக்கு இலங்கை இராணுவத்தினர் செய்து கொடுத்து இருந்தனர் .

அதே போல நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் சாட்சியமளிக்க “அருண் சித்தார்த் மைத்ரேயன்” அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சித்த போதும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

உண்மையில் பல்வேறு வழிகளில் “அருண் சித்தார்த் மைத்ரேயன்” எனும் இந்த நபரை சக்தி மிக்க மனிதராக உருவாக்கும் வேளைகளில் இலங்கை இராணுவம் ஈடுபட்டு வருகிறது

ராஜபக்சே குடும்பம் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் சிபாரிசில் அங்கயன் இராமநாதன் தலைமையிலான சுதந்திர கட்சியில் அணியில் தேர்தலில் போட்டியிட ஏற்பாடு செய்து இருந்த போதும் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று “அருண் சித்தார்த் மைத்ரேயன்” தோல்வியடைந்து இருந்தார்

இயல்பு நிலை உருவாகி விட்டது போல் தோற்றம் அளிக்கும் சூழலில் அவ்வப்போது தளம்பல் நிலமைகளை உருவாக்குவதற்கும் ஒடுக்குமுறைக்குட்பட்ட ஒரு தேசத்தின் அரசியலை ஓர் ஒழுங்கிற்குள் வைத்திருப்பதற்கும் “அருண் சித்தார்த் மைத்ரேயன்” போன்ற குற்றாவளிகளை நீண்டகாலமாக இலங்கை அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது

மேலும் யாழ்ப்பாண சிவில் சமூக கட்டமைப்பை உடைக்க புதிதாக யாழ் சிவில் அமைப்பு ஒன்றினையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

This is Arun Siddharth, slowly moving into Northern Sri-Lanka. He wanted to demolish நல்லூர் கோவில் to build public toilets. சிங்கள பேரினவாதத்தின் கைகூலி.

https://www.facebook.com/VishnuTNPF/videos/189326742719451/

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment