உலக மக்களுடன் சேர்ந்து உலகத் தமிழ்மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்த பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு மனித நேயத்தின் பெரும் இழப்பாக கருதுகிறோம்.

– தமிழீழ மக்கள் உலகளாவிய ரீதியில் இன நிறவெறிக்கெதிராகக் குரல் கொடுத்து வந்த மானுடநேயர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு் அவர்கள் தனது 90 ஆவது அகவையில் காலமான செய்தி எம்மையெல்லாம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஆன்மீகவழியில் மானுட விடுதலைக்காகப் போராடிய மகத்தான மாமனிதர். தென் ஆப்ரிக்கா மக்கள் இன -நிற வெறி அடக்குமுறைக்குள் இருந்த காலத்தில் நெல்சன் மண்டேலா மற்றும் தென் ஆப்ரிக்கா விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பலருடன் சேர்ந்து தனது மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர் டெஸ்மாண்ட் டுட்டு. அத்துடன் நின்று விடாமல், உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் மனிதவுரிமைகளுக்காவும் அமைதியான வாழ்வுக்காகவும் தன் வாழ்வின் இறுதிக்கணங்கள் வரை குரல் கொடுத்துவந்தவர். ஈழவிடுதலை மீதும் பற்றாளராகவும் தமிழர்களுக்கான நீதிக்காகவும் சர்வதேச அரங்குகளில் குரல் கொடுத்துவந்த பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு அவர்களது இழப்பு தமிழீழ மக்களுக்கும்…

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று 19.12.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான பொண்டிப் பகுதியில் இடம்பெற்றது.

மேலும்

சுவிசில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம்,
தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன்
உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 19.12.2021 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 10வது ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த எல்லோராலும் மாமா என்று அன்போடு அழைக்கப்படும் ஈழமுரசு இதழை வெளிக்கொண்டுவந்த பூபாளம் நிறுவனம் மற்றும் ஊடக இல்லத்தின் தலைவர் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 10வது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த 16.12.2021 வியாழக்கிழமை அன்று Lemeil Brevannes நகரில் அமைந்துள்ள அவரது கல்லறையில் இடம்பெற்றன. 

மேலும்

20. 12. 21 முதல் சுவிசில் நடைமுறைக்கு வரும் இறுக்கங்கள்

கடந்த கிழமை 300க்கும் மேற்பட்ட மகுடநுண்ணித் தொற்றாளர்கள் முனைப்புக்கவனிப்பு பண்டுகத்தில் (தீவிர சிகீச்சைக்கு) உட்படுவர் என பேரிடர்தடுப்பு அறிஞர்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. அது உண்மையில் நடந்தும் விட்டது. தற்போதைய சுவிற்சர்லாந்தின் நலவாழ்வு (சுகாதார) சூழல் இடர்நேரக்கூடிய வாய்ப்புடன் உள்ளது. பெரும் அறுவை மருத்துவம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத நேர்ச்சி (விபத்து) ஏற்பட்டாலும் விரைந்து மருத்துவம் செய்வதற்கு மருத்துவமனைகளில் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது இடர்நேர் சூழலாக நோக்கப்பட்டிருந்தது.

மேலும்

யாழ்.மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும்

தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி 2021 சுவிஸ்

தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் சுவிஸில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி கடந்த 12.12.2021 அன்று சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. சுவிஸின் பல பாகங்களிலும் இருந்து வீரர்கள் பெரும் உற்சாகத்துடன் சுற்றுப்போட்டியில் பங்குபற்றி இருந்தனர்.

மேலும்

சீன தூதுவர், மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் இன்றைய தினம் யாழ்ப்பாண பொது தூலகத்திற்கு விஐயம் செய்தார். இதன் போது யாழ் மாநகர முதல்வர் மற்றும் யாழ் மாநகர அதிகரிகளினால் தமிழ் பாரம்பரிய முறைப்படி வரவேற்ப்பு வழங்கப்பட்டது.

மேலும்

மாநகர சபை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பெருந்தேசியவாதத்தினுடைய நிகழ்ச்சி நிரல் இங்கே மேடையேறுவதற்கான வாய்ப்புக்கள் அமையும்.சி.ஆ.ஜோதிலிங்கம்

யாழ் மாநகர சபை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பெருந்தேசியவாதத்தினுடைய நிகழ்ச்சி நிரல் இங்கே மேடையேறுவதற்கான வாய்ப்புக்கள் அமையுமென சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சி.ஆ.ஜோதிலிங்கம் தெரிவித்தார்.

மேலும்