தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி 2021 சுவிஸ்

0 0
Read Time:3 Minute, 4 Second

தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் சுவிஸில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி கடந்த 12.12.2021 அன்று சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. சுவிஸின் பல பாகங்களிலும் இருந்து வீரர்கள் பெரும் உற்சாகத்துடன் சுற்றுப்போட்டியில் பங்குபற்றி இருந்தனர்.

தமிழீழத்தின் கராத்தேயின் தந்தை என அழைக்கப்படும் திரு ஷீகான் பொனி றொபேட்ஸ் அவர்களின் பயிற்சி பட்டறையில் பங்கெடுத்தவரும் ஜப்பான் கராத்தே ஈதோ சூ காய் சுவிஸ் கிளையின் தலைமை ஆசிரியருமான ஷீகான் விபுலானந்தன் கௌரிதாசன் ( Shotokan karate School Bern) அவர்களின் நெறிப்படுத்தலில்இ சென்சே சப்தேஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் இளையோர்கள் முன்னின்று நடத்திய சுற்றுப்போட்டியில் நடுவர் குழுத்தலைவராக செம்பாய் மிதுரன் பணியாற்றினார்.

இளையோரின் செயற்படுதிறன்இ போட்டியில் பங்குபற்றிய மாணவர்களின் ஒழுக்கம் போன்றவற்றை அவதானித்த சுவிஸ் கிளைப்பொறுப்பாளர்கள்இ முதன்மை விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும் வியந்து பாராட்டினர்

சிறப்பு விருந்தினராக பேர்ண் ஷோடோகன் (Shotokan karate School Ber )கராத்தே பள்ளியின் தலைமை ஆசிரியர் சென்சே மன்மதன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக சென்சே சிறிவிஜயகுமார் மற்றும் செம்பாய் வைகுந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

காலை 9.00 மணிக்கு தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வு மாலை 18.30 இற்கு நிறைவு பெற்றது. போட்டியில் பங்குபற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும் பதக்கம் அணிவித்ததோடு வெற்றி ஈட்டியவர்களுக்கு சான்றிதழும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது. இறுதியாக சிறப்பு விருந்தினர்இகௌரவவிருந்தினர்இ போட்டி நடத்துனர் ஆகியோர் தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினரால் மதிப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து தேசியக்கொடி இறக்கலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

விளையாட்டுத்துறை

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment