தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டிய புவிசார் அரசியலின் யதார்த்தங்கள்

0 0
Read Time:3 Minute, 51 Second

நேற்றைய முன்தினம் நடந்த இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்தது. அதை தொடர்ந்து தமிழர்கள் சமூக ஊடகத்தில் தமது கோபத்தை, ஆற்றாமையை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த உணர்வுகளை புரிந்து கொள்ளமுடிகிறது.

அதே நேரம் இந்தியா நடுநிலை வகித்ததை கண்டு தமிழர்கள் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்த புள்ளியைத்தான் இந்த பதிவில் நான் பேச நினைக்கிறேன். இதன் பின்னே இருக்கும் தமிழர்களின் முட்டாள்தனத்தையும் சுட்டிகாட்ட வேண்டியிருக்கிறது.

தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டிய புவிசார் அரசியலின் யதார்த்தங்கள்

  1. #உலக ஒழுங்கில் உள்ள இறையாண்மையுள்ள நாடுகள் தமது நலன்களை அடிப்படையாக வைத்தே இயங்கும்.

there are no permanent friends or enemies but permanent interests in international relations.

உலக ஒழுங்கின் இயங்கு விதி என்பது அறத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டதல்ல. அவைகளின் நலன்களை அடிப்படையாக கொண்டவை. இதுதான் #குரூரமான கள யதார்த்தம்.

தமிழர்கள் நாம் திரும்ப திரும்ப கேணைத்தனமாக,இந்த நாடுகள் அறம்சார்ந்து எமது தரப்பு நியாயத்தை அணுகவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

உலகமே வேறோரு விதியில் இயங்கும்போது, தமிழர்கள் ‘அறம் சார்ந்த உலகம்’ என்ற கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டு இந்த சதுரங்க ஆட்டத்தை ஆட முயற்சிக்கிறோம்.

  1. #உண்மையிலேயே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் என்பது, ஆசிய பிராந்தியத்தில் இறுக்கமடைந்துவரும் சீன-அமெரிக்க போட்டியின் ஒரு பகுதி.

சீன-அமெரிக்க Great Game இல் , மேற்குலகு இலங்கையை தன்வசம் கொண்டுவர சில நகர்வுகளை செய்திருக்கிறது. இதற்கான எதிர் நகர்வுகளை சீனாவும்,இலங்கையும் எப்படி செய்யப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அவ்வளவுதான்.

  1. #இந்தியா இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தால்தான் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கவேண்டும்.

இந்தியாவை மீண்டும் மீண்டும் தன்னை காக்க வந்த ஆபத்வாந்தவனாக தமிழர்கள் கருதினால் நாம் புவிசார் அரசியலில் மக்குகளாக இருக்கிறோம் என்பதே அர்த்தம்.

இதற்கான அர்த்தம் இந்தியாவிற்கு எதிரான நிலை எடுக்கவேண்டும் என்பது அல்ல.

தமிழர்களும் there are no permanent friends or enemies but permanent interests in international relations என்ற பார்வையில் சகல நாடுகளையும் அணுகவேண்டும் என்பதே அதன் அர்த்தம்.

க.ஜெயகாந்த்

‘சீன-அமெரிக்க போட்டியில் இலங்கை’ என்ற கோணத்தில் முன்பு நான் எழுதிய பதிவின் இணைப்பு கீழே.

• #சீன-அமெரிக்க போட்டியும் தமிழர் சமூகமும்

https://m.facebook.com/story.php?story_fbid=1984091631726993&id=100003785277352

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment