தமிழர்க்கெதிரான இறுதிப்போரில் தமிழகத் தலைவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்ததாக சிவ்ஷங்கர் மேனன் தனது புத்தகத்தில் கூறுகிறார்?

0 0
Read Time:10 Minute, 25 Second

சிவ்ஷங்கர் மேனன் – ஈழத்தமிழர்களால் மறக்கமுடியாத, அவர்களின் சரித்திரத்தில் பதிந்துவிட்ட பெயர். லட்சக்கணக்கான அப்பாவிகளின் படுகொலைகளுக்கும், தமிழரின் தாயகத்தில் முற்றான சிங்கள ஆக்கிரமிப்பிற்கும், அவர்களின் தாயக சுதந்திர விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடக் காரணமான இரு மலையாளிகளில் ஒருவரது பெயர்.

சிவ்ஷங்கர் மேனன் – ஈழத்தமிழரின் ரத்தத்தில் குளித்த மலையாளி !
ஈழத்தமிழர் வாழ்வின் அத்தனை அவலங்களுக்கும் காரணமான இந்தியாவின் இலங்கை தொடர்பான பத்தாம்பசலி வெளியுறவுக்கொள்கையினை இந்தியா சுதந்திரம் அடைந்ததுமுதல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மலையாள நம்பூதிரிகளின் குடும்பமான மேனன் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை வாசிசு இவர். அத்துடன், 1998 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பிரதமருக்கு அடுத்தபடியான மிகப்பலம் கொண்ட “இந்திய பாதுகாப்புச் செயலாளர்” எனும் பதவியினை தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும், 1980 கள் முதல் 2009 இனக்கொலை வரைக்கும் ஈழத்தமிழரின் அவலங்களுக்கு முக்கிய காரணகர்த்தாக்களாக விளங்கியவர்களுமான மலையாளி மும்மூர்த்திகளில் மிக முக்கியமானவர் இந்த சிவ் ஷங்கர் மேனன்.
ஈழத்தமிழர் மீதான சிங்கள பெளத்த இனவாதிகளின் இனவழிப்புப் போர் திட்டமிடப்பட்ட காலப்பகுதியான 2006 முதல் இனக்கொலை நடத்தி முடிக்கப்பட்ட 2009 மே மாதம் வரை சிவ் ஷங்கர் மேனனே இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், 1997 முதல் 2000 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான இந்தியாவின் தூதராகக் கடமையாற்றியிருக்கிறார்.
ஆகவே, தமிழர்களின் அவலங்களின் மிக முக்கியமான காலங்களில், இவர் இந்தியா சார்பாக முடிவெடுக்கக் கூடிய, பிரதமருக்கு ஆலோசனைகளை வழங்கக்கூடிய நிலமையில் இருந்திருக்கிறார். இவரது ஆலோசனைப்படியும், சோனியாவின் விருப்பப்படியுமே மன்மோகன் சிங் எனும் அடையாளம் இல்லாத மனிதர் இந்தியாவின் ஈழத்தமிழர் மீதான இனக்கொலைக்குச் சம்மதம் தெரிவித்திருந்தார்.

ஒரு கொலையாளியின் வாக்குமூலம் – சிவ்ஷங்கர் மெனனின் தெரிவுகள்
2016 ஆம் ஆண்டில், தமிழர் மேல் இலங்கையுடன் கூட்டுச் சேர்ந்து, இந்தியா நடத்திய இனக்கொலையில், தனது பங்கு அடங்கலாக பல விடயங்களை மேனன் “தெரிவுகள்” எனும் புத்தகம் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.
அப்புத்தகத்தில், இலங்கைக்கான இந்தியாவின் ராணுவ உதவிகள், புலிகளின் ஆயுதக் கப்பல்கள் மீதான இந்திய கடற்படையின் தாக்குதல்கள், ராணுவத்திற்கான பயிற்சிகள், கடற்படைக்கான ரோந்துக்கப்பல்கள், செய்மதி வழிக்காட்டல்கள், விமானப்படைக்கான உலங்கு வானூர்திகள், முப்பரிமாண ராடர் நிலையங்கள், அவற்றை இயக்குவதற்குத் தேவையான இந்திய நிபுணர்கள் என்று இந்தியாவின் அளப்பரிய உதவிகள் பற்றி அவர் கிலாகித்து எழுதியிருந்தார்.
ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சோனியாவையும், மலையாளிகளையும் தயக்கப்பட வைத்த ஒரு விடயம் இருக்கிறது. அதுதான் தமிழக மக்களின் ஈழத்தமிழருடனான நெருக்கமும், தமிழர்களை அழிக்கும் போருக்கெதிரான அவர்களின் நிலைப்பாடும். ஆகவே, தாம் நேரடியாகப் போரில் இறங்குமுன்னர், தமிழகத்தில் உள்ள அரசியல்த்தலைவர்களை தமது அழிவு யுத்தத்திற்குச் சம்மதம் தெரிவிக்க அழுத்தம் கொடுக்கும் பொறுப்பினை சோனியா மேனனிடம் கொடுத்திருந்தார். இதற்காகவே மேனன் பலமுறை கருனாநிதியையும், ஜெயலலிதாவையும் தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருக்கிறார். இவரது தமிழகத்திற்கான பயணங்களும், காரணங்களும் அன்று ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. இந்த ரகசியத்தையும் மீறி தகவல்கள் வெளியே கசிந்தபோது, “தமிழர்களைப் பாதுகாக்குமாறு இலங்கையரசினைக் கேட்டுக்கொள்கிறோம், யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்படவில்லையென்பதை தமிழக அரசியல்த் தலைவர்களுக்குத் தெரிவிக்கவே வந்தேன்” என்று மேனன் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டிருந்தார்

ஆனால், அவர் 2016 இல் எழுதிய புத்தகத்தில், அவரது பயணங்களில் போது இடம்பெற்ற முக்கியமான கலந்துரையாடல்களின் விடயங்கள் பற்றி அவரே குறிப்பிட்டிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளை கீழே தருகிறேன்.

“………………………….பொதுமக்கள் பாதுகாப்பு வலயம் மீது இலங்கை ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்திக்கொண்டேயிருந்தது. அதேவேளையில் இங்கிலாந்தும், அமெரிக்காவும் உடனடியான யுத்த நிறுத்தம் ஒன்றிற்கான முயற்சிகளில் இறங்கியிருந்தன. அத்துடன், புலிகளின் தலைவர் பிரபாகரனை பத்திரமாக யுத்த களத்திலிருந்து வெளியேற்றி, புலிகள் முற்றாக அழிவதைத் தடுத்து, அவர்களின் சுதந்திரப் போராட்டம் அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தொடர்ச்சியாக நடைபெறுவதே அந்த நாடுகளின் நோக்கமாக இருந்தது. ஆனால் தில்லியிலும், தமிழ்நாட்டிலுமிருந்த அரசியல்த் தலைவர்களைப் பொறுத்தவரையில், புலிகள் தப்பிக்க விடப்படுவதோ அல்லது பிரபாகரனை உயிருடன் விடுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு முடிவாக அன்று இருந்ததோடு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது பாதகமாக அமையும் என்பதையும் நாம் உறுதியாக நம்பினோம்.
தமிழகத்தில் இரு பிரதான கட்சிகள் உட்பட, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பொறுத்தவரையில் ஈழத்தை அடைவதற்கான பிரபாகரனின் போராட்டத்திற்கு தமிழகத் தலைவர்கள் முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பிற்குப் பிரபாகரன் அச்சுருத்தலாக இருப்பார் என்று நம்பினார்கள்.
மக்கள் முன்னால், தில்லியின் தமிழர் மீதான போருக்கு எதிரானவர்கள் என்று தமிழகத்தலைவர்கள் காட்டிக்கொண்டாலும்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தில்லியின் மத்திய அரசாங்கத்துக்குமிடையே மிகச் சுமூகமான உறவு நிலவி வந்ததுடன், புலிகளை முற்றாக அழிப்பது தொடர்பாக ஒருமித்த கருத்தே அன்று நிலவியது. பிரணாப் முகர்ஜீ மற்றும் நாராயணன் ஆகியோரது அயராத முயற்சியினால், தமிழக அரசியல்த்தலைவர்கள், கட்சி பேதமின்றி இப்போருக்குத் தமது ஆதரவினை தனிப்பட்ட ரீதியில் வழங்கியதோடு, என்னுடனான தனிப்பட்ட சந்திப்புகளில் எவ்விலை கொடுத்தாவது புலிகள் அழிக்கப்படவேண்டியதையும் வலியுறுத்தியிருந்தனர்.
ராஜீவ் காந்தியைக் கொன்றதுமுதல், தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு எதிரான நிலைப்பாடு வலுப்பட்டு வந்ததுடன், இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இருந்த பொது எதிரியான புலிகளை அழிக்கவும் இந்த நிலைப்பாடு பெரிதும் உதவியது”

ஆக, இந்த உண்ணாவிரத நாடகங்களும், மனிதச் சங்கிலிப் போராட்டங்களும், கருனாநிதியால் சோனியாவுக்கு எழுதப்பட்ட கடிதங்களும், அவசரமாக அனுப்பப்பட்ட தந்திகளும், சட்டசபைத் தீர்மானங்களும் பொய்யானவை, போலியானவை என்பதுடன், இன்று காங்கிரஸ் அடிவருடிகளும், கழகக் கண்மணிகளும் கூவும், “தமிழர்களைக் காக்கவே இந்தியா போரிட்டது ” என்பது ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை மறைக்க தமிழக ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் ஆடிய நாடகம்தான் என்பது தெளிவாகிறது,

https://m.facebook.com/story.php?story_fbid=165692555381636&id=100058226779513

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment