மெக்கானிக் கடையில் மோட்டார் சைக்கிளைத் திருத்தக் கொடுத்துவிட்டு, இருவரும் ஆளுக்கொரு திசையில் நேர் எதிராக அமர்ந்தனர். குரு ஒரு பழைய செய்தித்தாள் ஒன்றைத் தொட்டுப் புரட்டிக்கொண்டு இருந்தான்.குருவின் செயல்கள் மாறனுக்கு அப்போதைக்கப்போது சில சங்கடங்கள் கொடுத்தாலும், அவனுடைய குணாதிசயங்களை எண்ணி அவன் உள்ளுக்குள் ரசித்துக் கொண்டான். ‘இவன் எப்படி இயக்கத்திற்கு வந்தான்? இவனது இயல்புக்கும் இயக்கத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கும் இருக்கும் இடைவெளி மிக மிக அதிகம். இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், இவனால் ஒரு குழந்தை போலச் சுதந்திரமாக எப்படி இருக்க முடிகிறது? நாளையைப் பற்றிய கவலை அவனுக்குச் சிறிதும் இல்லை. போர்க்களத்தில் மூர்க்கத்தனமாகச் சண்டையிடுவான்; முகாமுக்குத் திரும்பியவுடன் தன் சேட்டைகளை ஆரம்பித்துவிடுவான். சகப் போராளிகளுக்கு ஆளுக்கொரு பட்டப்பெயர் வைத்துத்தான் கூப்பிடுவான்.’யாருமே இவனை கோபித்துக் கொள்வதில்லை. அவன் இருக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாக இருந்தது.
மேலும்Year: 2025
காற்றாகி மூச்சிலேகலந்த வல்லமையோர்
கார்த்திகை போர்த்திடக் கருமுகில்நேர்த்தியாய்ப் பொழிந்திடும்வேர்த்திடும் வேர்களில் வீரமும் சேர்ந்தே முளைவிடும்-புகைபோர்த்திய எரிமலைக்குளம்புகள்ஆர்த்து வெடித்திடும்-மனக்கூட்டினுள் வெப்பம் குமுறிக்கொப்பளித்து வெளிவரும்பாட்டுக்கள் ஆயிரம் மாவீரப் பண்களாய்ப் பிறக்கும்ஆண்ட நம் தமிழீழத்திசைகள்அமைதியாய்த்துடிக்கும்-கடல்தாண்டியே தவிப்புடன் தமிழீழத்தாகம் தகிக்கும்மாண்டவர் கல்லறைக்கோவில்கள்மலர்க்கதவு திறக்கும்மலரட்டும் மண்மடி என்றேமாவீரம் சிலிர்க்கும்-நல்வாழ்வொன்றைக்காணத் தலைவனின்வழிசென்ற வீரர்சாதனை வென்று எழுதியசரித்திரக் காலமிது
மேலும்நவம்பர் 27
பிரான்சில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் கடந்த 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் 95 ஆம் பிரிவில் உள்ள Le Thillay என்ற இடத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2025 நிகழ்வு காலை 10.30 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகி உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
மேலும்விடுமுறை பாகம் 3
போராளிகளின் கையில் யாழ்ப்பாணம் இருந்தபோது நிலைமை என்னவோ சுமாராகத்தான் இருந்தது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பணம், ஆயுதக் கொள்வனவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதுவும், ஓர் அரச இயந்திரத்திற்கு எதிராகச் சில ஆயிரம் புலம்பெயர் மக்களின் உதவியுடன் தொடர்ந்து பல ஆண்டுகள் போராடுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது.
மேலும்எங்கும் நிறைந்த இறைஎம்மைச் செதுக்கும் இசை
தேடுதல் தேவையில்லை திரும்பும் திசையெல்லாம்அண்ணன் முகம்தேடுதல் தேவையில்லைதிருவுருவாய் நெஞ்சறையில்அண்ணன் பதிதேடுதல்தேவையில்லைதிடமான செயல்களில்அண்ணன் குரு
மேலும்நவம்பர் 26
விடுமுறை பாகம் 2
தமிழீழத்தில் போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மிகவும் உன்னதமானது. அங்கே சாதி, மதங்களுக்கு இடமே கிடையாது. எல்லோரையும் உறவு முறை வைத்துத்தான் அழைப்பார்கள். தாய் வயது ஒத்தவர்களை ‘அம்மா’ என்று அழைப்பார்கள். அதேபோல், ‘அப்பா,’ ‘தங்கச்சி,’ ‘அண்ணா,’ ‘ஐயா,’ ‘பாட்டி’ என்று அனைவரையும் சொந்தம் கொண்டாடுவார்கள்.
மேலும்நவம்பர் 25
விடுமுறை (பாகம் 1)
கொக்குத்தொடுவாயில் இருந்து புறப்பட்டபோது மாலை 6 மணி ஆகிவிட்டது. “கவனம், யானைக் காடுகளைத் தாண்டிப் போக வேண்டும். இரவு இங்கேயே தங்கிவிட்டு, காலையில் போங்கள்,” என்று பொறுப்பாளர் சொல்லிவிட்டுப் போனது மாறனின் நினைவுக்கு வந்தது. இவனது நண்பன் குருதான், “காலையில் கிளம்பினால் ஒரு நாள் வீணாகிவிடும், இரவோடு இரவாகக் கிளம்புவோம்,” என்று யோசனை சொன்னவன்.
மேலும்