இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான விடையத்தை எதிர்வரும் ஜ.நா கூட்டத்தொடரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை வேண்டும்
மேலும்Year: 2021
கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகப் பாதுகாப்பணிகள் மீது தாக்குதல் நடாத்த வந்த இலங்கைக் கடற்படையினருக்குத் தகுந்த பதிலடி கொடுத்த கடற்புலிவீரர்கள்
கடற்புலிகளின் பிரதான தளமான முல்லைத்தீவு சாளைத்தளத்திலிருந்து உயர நூற்றிஇருபது கடல்மைல்களுக்கு சென்று அங்கிருந்த விடுதலைப்புலிகளின் கப்பல்களிலிருந்து தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற பணிகளில் லெப் .கேணல் சாள்ஸ் படையணியும், லெப்.கேணல்.நளாயினி படையணியும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
மேலும்நல்லூர் கந்தன் அடியவர்களுக்கான அறிவித்தல்.
நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத்தடைகளில் பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலீசாருடன் நேரில் ஆராயப்பட்டது. விசேட திருவிழாக்கள் மற்றும் பூசை நேரங்களை தவிர மீதி நேரங்களில் பயண கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தவும் பொதுமக்களை ஆலய சூழலில் உள்ள கடைகளுக்கு செல்ல அனுமதிக்கவும் இணங்கப்பட்டது.
மேலும்தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2021! – பகுதி 02செய்தியும்,படமும்.
மேலும்கடலன்னையின் புரட்சிப் பெண் குழந்தை
கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கன்னியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.
மேலும்பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைச் சிறார்கள் மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 15 ஆவது ஆண்டு நினைவு நாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 10 வது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு பஸ்ரில் பகுதியில் இன்று 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்16.00 மணிக்கு கோவிட் 19 சட்டதிட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்றது.
மேலும்பிரான்சில் ‘இளங்கலைமாணி’ (B.A) தமிழியல் பட்டக்கல்வியில் தொடரும் வினைத்திறன்!
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும், தமிழ் இணையக் கல்விக்கழகமும்- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் (B.A) பாடநெறியில் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வு , தேர்வின் இறுதி நாளான 08/08/2021 அன்று தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பட்டகர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் இந் நிகழ்வில் மதிப்பளிக்கப்பட்டனர்.
மேலும்தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ்
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.!எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கும் முகமாக;
மேலும்செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு,
மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.இதில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், மாநகர சபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், சிவகாந்தன் தனுஜன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேலும்திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்திய விடுதலைப்புலிகளின் படையணிகள்.
தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் காலம்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழ்மக்களை மிருகத்தனமாக தாக்கி விரட்டி விட்டு அங்கே சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் துரிதகதியில் மேற்கொண்டு வந்தது.அதே நேரம் இத்திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்க்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தின் காவலரன்களும் துரிதமாக அமைக்கப்பட்டன.
மேலும்