புதிய முகவரியில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகம் திறப்பு.

0 0
Read Time:3 Minute, 2 Second

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகம் Felsenausstrasse 17, 3004 Bern

என்னும் புதிய முகவரியில் 30.08.2026 ஞாயிறு அன்று சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது. அமைப்பின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தி, ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்குடன் இந்தப் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.


நிகழ்வுச் சுடரேற்றலினைத் தொடர்ந்து தமிழீழத்தின் பல்வேறு மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து சேகரிக்கப்பெற்ற புனித மண்ணைத் தாங்கியபடியும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் புகைப்படம் முன்னின்றபடியும் நாடா வெட்டப்பட்டு அரங்கிற்கு எடுத்துவரப்பட்ட புனிதமண் புதியஅ லுவலகத்தில் அமையப்பெற்ற மாவீரர் துயிலும் இல்ல முன்றலில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் உணர்வுடன் ஆரம்பமாகின.
இத் திறப்புவிழா நிகழ்வில் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். எமுச்சிப்பாடல்கள் மற்றும் கவிதையுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் உரையும் நிகழ்த்தப் பெற்றது.
இப் புதிய அலுவலகம் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளை மேலும் ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்வதற்கான முக்கிய செயற்பாட்டு மையமாக அமையவுள்ளது. மேலும் அரசியல் மற்றும் பொதுப்பணிகளை திட்டமிட்டு முன்னெடுப்பதுடன், மக்களுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இவ்வலுவலகம் வழிவகுப்பதோடு அமைப்பின் செயற்பாட்டுப் பயணத்தில் நம்பிக்கையையும் கொடுப்பதாக அமைந்துள்ளது.
இறுதியில் நம்புங்கள் தமிழீழம் பாடலை அனைவரும் இணைந்து பாடி தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றது. தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவுகள் வழங்கப்பட்டது. இப் புதிய அலுவலகத்தின் திறப்பு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டுப் பயணத்தில் புதியதோர் அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்தது.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment