கடற்கரும்புலி மேஜர் விடுதலை, அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்

0 0
Read Time:6 Minute, 5 Second

முல்லைக் கடற்பரப்பில் 21.02.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் எதிர்பாராமல் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் விடுதலை, கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி / பூங்கதிர் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

1992ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகளில் முழுமையாக இணைத்துக் கொண்ட விடுதலை. கடற்புலிகள் மகளிர் படையணயின் முதலாவது பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட விடுதலை தொடர்ந்து ஏனைய பயிற்சிகளையும் முடித்தவள்.தொடர்ந்து மண்டைதீவில் கைப்பற்றப்பட்ட நீருந்து விசைப் படகின் இயந்திரம் சம்பந்தமாக கற்பதற்காக சென்ற போராளிகளுள் ஒருத்தியாகச் சென்றவள். பயிற்சிகளை முடித்த நிலையில் பூநகரிச் சமரில் திட்டமிட்டபடி நீருந்து விசைப்படகை கைப்பற்றி அவைகளைக் கொண்டுவருவதற்காக லெப் கேணல் பாமா அவர்கள் தலைமையில் சென்றவர்களில் ஒருத்தியாகச் சென்ற விடுதலை அவைகளை கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றினாள்.அச்சமரில் விழுப்புண்ணுமடைந்தாள்.
அதனைத் தொடர்ந்து கடற்புலிகளின் தொழில்நுட்பக்கல்லூரிக்கு மேலதிக பயிற்சிக்காகச் சென்ற விடுதலை .தொடர்ந்து கிளாலிக் கடல் நீரேரியில் இயக்கத்தின் முக்கிய போக்குவரத்திற்க்கான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட விடுதலை அந்நேரத்தில் தலைவர் அவர்கள் வன்னிக்கு வந்துபோகும் நேரத்தில் அப்படகின் இயந்திரவியளாளராக லெப் கேணல் சதீஸ் அவர்ர்களுடன் உதவியாக விடுதலையும் சென்று வந்தவள் . யாழ் இடப்பெயர்வின் போது முக்கிய தளபதிகளையும் பாதுகாப்பாக வன்னிக்கு நகர்த்தியதில் முக்கிய பங்காற்றிய விடுதலை. யாழ் இடப்பெயர்வின் பின் தேவிபுரம் பகுதியில் வெளியினைப்பு இயந்திரம் சம்பநதமாகவும் கற்ற விடுதலை. அதன் பின் கடற்புலிகளின் கடற்தாக்குதல் மற்றும் கடல் விநியோகப் படையணியான நளாயினி படையனிக்குள் உள்வாங்கப்பட்டாள்.இங்கு வந்தவள் கனரக ஆயுதப் பயிற்சி எடுத்து அதனுடன் நின்றவள் அக் காலப்பகுதியில் சாளையில் படகுகளுக்கான பதுங்குகுழி அமைப்பதிலிருந்து உருமறைப்பிலிருந்து படகுகளில் வரும் பொருட்களை இறக்குவதிலிருந்து ஏனைய அனைத்து வேலைகளிலும் சகபோராளிகளுடன் இணைந்து செய்வதில் முன்னின்றவள் அத்துடன் சாளையிலிருந்து தமீழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற விநியோகப் பணிகளிலும் ஈடுபட்ட விடுதலை. விநியோகப் பாதுகாப்புச் சமர் மற்றும் வலிந்த தாக்குதலிலும் படகுச் சாரதியாக ,இயந்திரப் பொறியியளாளராக, தொலைத்தொடர்பாளராக , கனரக ஆயுதத்தின் பிரதான சுடுனராகவும், கட்டளை அதிகாரி என பல் வேறுபட்ட நிலைகளில் மிகத்திறமையாச் செயற்பட்ட விடுதலை .ஒயாத அலைகள் மூன்று நிலமீட்ப்புச் சமரிலும் பங்குபற்றிய விடுதலை இவ்வாறாக பல்வேறு இடங்களில் பல்வேறு சமர்களில் பங்குபற்றி தனது மிகத் திறமையான செயற்பாட்டால் போராளிகள் மற்றும பொறுப்பாளர்கள் மத்தியில் தனக்கான ஒரிடத்தைப் பதித்துக் கொண்டாள் என்று கூறுவதில் மிகையாகாது.இப்படியான விடுதலை சகபோராளிகளுடன் அன்பாகப் பழகுவதில் விடுதலை நிகர் விடுதலையே.கடலில் நடைபெற்ற பெரும்பாலான சமர்களிலும் விநியோகப்பணியிலும் பங்குபற்றிய
விடுதலை. அந்தநேரத்தில் தனது நீண்ட நாள் கனவான கடற்கரும்புலிகள் அணியில் இணைவதற்கான அனுமதியை தலைவர் அவர்களிடம் கடிதமூலம் பெற்றுக்கொண்ட விடுதலை கடற்கரும்புலிகளுக்கான விசேட பயிற்சியையும் பெற்றாள்.தனக்கான கரும்புலித்தாக்குதலுக்கான சந்தர்ப்பம் வரும்வரை தொடர்ந்தும் அப்பணிகளில் செவ்வனவே செயற்பட்ட விடுதலை. 21.02.2001 அன்று தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற ஆழ்கடல் விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது சகபோராளிகள் எட்டுப் பேருடன் வீரச்சாவடைகிறாள்.

கடற்கரும்புலி மேஐர் விடுதலை
கந்தையா இந்திராணி
ஆழியவளை தாளையடி யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 11.04.1975

கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்)
நல்லநாதன் பவானி
வவுனியா

வீரப்பிறப்பு:30.03.1980

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment