பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை 20 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0 0
Read Time:3 Minute, 18 Second

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 20 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு றிபப்ளிக் பகுதியில் கடந்த (14.08.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல்16.00 மணிக்கு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது..

சிங்கள ஆட்சியாளர் தமிழீழ மக்களை மட்டுமல்ல பள்ளிக் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை 2006 இந்த நாட்களில் வள்ளிபுனத்தில் இருந்த செஞசோலை குழந்தைகள் வளாகம் மீது 16 குண்டுகளை வீசி அந்த இடத்திலேயே 61 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர். 100 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அவையவங்களை இழந்து இன்றும் துன்பத்தோடு வாழ்கின்றனர்.
இவர்களுக்கான நீதி சர்வதேசம் தான் கொடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக 20 வருடங்களாக பிரான்சில் தமிழ்ப்பெண்கள் அமைப்பு பிரெஞ்சு அரசிடமும் நீதியை கேட்டுக்கொண்டே வருகின்றது..

பாரிஸ் சுதந்திர நீதி தேவதையின் சிலைக்கு முன்பாக தமிழ்ப்பெண்கள் அமைப்பால் கவனயீர்ப்புப் போராட்டம் 4.00 மணிமுதல் 6.00 மணிவரை நடாத்தப்பட்டது. இதில். உணர்வுள்ள தமிழர்கள், இளையவர்கள் பங்கெடுத்திருந்தனர். வெளிநாட்டு மக்களோடு பிரெஞ்சு மக்களும் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட செஞ்சோலை படுகொலை நினைவுசுமந்த காட்சிகளையெல்லாம் பார்த்து நின்றனர்..
பிரான்சு நாட்டில் தற்போது வெப்பம் 39 பாகையை தொட்ட போதும் அதற்கும் மத்தியில் குழந்தைகளின் நடனம், தமிழ்
பிரெஞ்சு மொழியான பேச்சுக்களும் கவிதைகளும் இதில் இடம்பெற்றதோடு மூன்று தமிழர்களின் விடுதலைக்காகவும், ஈழத்தமிழ் மக்களுக்காகவும் 2011இல் தனக்குத் தானே தீமூட்டிய வீரப்பெண் தோழர் செங்கொடியின் 15 ஆவது ஆண்டும் இங்கு நினைவு கூரப்பட்டது.

(தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு -செய்திப் பிரிவு )

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment