விடுமுறை பாகம் 2

தமிழீழத்தில் போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மிகவும் உன்னதமானது. அங்கே சாதி, மதங்களுக்கு இடமே கிடையாது. எல்லோரையும் உறவு முறை வைத்துத்தான் அழைப்பார்கள். தாய் வயது ஒத்தவர்களை ‘அம்மா’ என்று அழைப்பார்கள். அதேபோல், ‘அப்பா,’ ‘தங்கச்சி,’ ‘அண்ணா,’ ‘ஐயா,’ ‘பாட்டி’ என்று அனைவரையும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

மேலும்

விடுமுறை (பாகம் 1)

கொக்குத்தொடுவாயில் இருந்து புறப்பட்டபோது மாலை 6 மணி ஆகிவிட்டது. “கவனம், யானைக் காடுகளைத் தாண்டிப் போக வேண்டும். இரவு இங்கேயே தங்கிவிட்டு, காலையில் போங்கள்,” என்று பொறுப்பாளர் சொல்லிவிட்டுப் போனது மாறனின் நினைவுக்கு வந்தது. இவனது நண்பன் குருதான், “காலையில் கிளம்பினால் ஒரு நாள் வீணாகிவிடும், இரவோடு இரவாகக் கிளம்புவோம்,” என்று யோசனை சொன்னவன்.

மேலும்

விடுமுறை(சிறு கதை)

“டேய், இன்னும் பலமாகத் தள்ளடா!” என்றான் மாறன்.குருவுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. “முடியலடா! மூன்று கிலோமீட்டர் தள்ளியாச்சு. ஸ்டாற் வருகிற மாதிரி இல்லையடா!” என்று சலித்துக் கொண்டான்.

மேலும்

காவல் (சிறுகதை)

இரவின் கனத்த போர்வை உலகை மூடியிருந்தது. நேரம், இரவு பத்து மணி. நாயாற்றுப் பாலத்தின் மேல் வானின் கரிய இருட்டைக் கீறிக்கொண்டு பாய்ந்த ஓர் ஒளிக் கற்றை, வானெங்கும் வெள்ளிப் பூச்சாகப் படர்ந்து சட்டென மறைந்தது. அது, ஒரு வாகனத்தின் முகப்புக் குமிழிலிருந்து புறப்பட்ட வெளிச்சம்..

மேலும்

வீமன்

(1987 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதை) வீமன் செத்துப் போனான். மூன்று மாதங்கள் உணவின்றி பட்டினியால் செத்துப் போனான். மானிடர்களின் அருவருப்பான ஆசைகளிலிருந்து பிறப்பெடுத்த போரினால் வீமன் செத்து போனான்.

மேலும்

இராட்சத திமிங்கிலத்தை விழுங்கிய மீன் குஞ்சு.

பரந்த கடல் வெளியில், கரையோரத்தில் ஒரு சிறிய உருவம். நீண்ட நாட்களாக, உப்புக் கடலின் நீரிலும், சுட்டெரிக்கும் கடற்கரை மணலிலும் தினமும் பயிற்சி பெற்று, அங்கயற்கண்ணியின் உடல் காய்ந்து மெலிந்திருந்தது. அவளது உடலில் மேலும் கருமை ஏறியிருந்தது.

மேலும்