Read Time:48 Second
இளமையில் தெளிவாகி இன்வாழ்வைத்துறந்தவன்
அகிம்சைத்துறவு பூண்டு- கனவுகள்
அனைத்தையும்
தூரவிரட்டி
இலக்கு ஒன்றென தமிழ்
இனத்தை நெஞ்சிருத்தி
பெருத்தயாகம்
ஒருத்தனாய்ப்புரிந்தாய்
நிலைத்த பேரீகம் வரித்து நீ நடந்தாய்
இருபத்துநான்கு வயதில்
இத்தனை மனத்தெளிவு
எப்படித்தான் வந்ததோ! -எல்லா
வசந்தங்களையும் காற்றோடு தூவ
இலட்சிய வேட்கையை உந்தனுள்ஏந்த..
மக்களுக்காய்ப்பசிவேள்வியில் எரிந்தாய் அண்ணா
மாண்புசேர் உயர்வினில் நீ
ஒளிர்கிறாய்
அண்ணா…
