லெப் கேணல் நவம் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள்!

0 0
Read Time:17 Minute, 40 Second

லெப்.கேணல் நவம்

படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். உனக்கு ஒரு கையில்லை இனி வீட்டிலேயே இரு. அன்பின் மேலீட்டால் இப்படியொரு வேண்டுகோளை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கினறது. தனக்கு இரக்கம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் சரியானவேளையென முடிவெடுக்கிறான்.

“எனக்கு இன்னொரு கை இருக்கு”. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது! அவனது சொற்கள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தமது தவறை எண்ணி நாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு கிட்டு எப்படி நம்பிக்கை ஒளியாக, வழிகாட்டியாக திகழ்கின்றாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களை இழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறான் அவன். அவன்தான் டடி.

டடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி. இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலைப் நாட்டில். போராடியது வன்னிக் காளங்களில். வன்னியை காதலித்த…. வன்னிக் களத்திலே காயமுற்ற இவன் உயிர் பிரிந்தது தமிழகத்தில்.

பசிலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகிய ஒரு போராளி கூறிய சொற்கள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமாக சில ஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்குப் பெயர் போனவன் பசீலன். சிறந்த மதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும் ஒருவரிடத்தில் கண்டதால்தான் நவத்தைப் பற்றி அப் போராளி இவ்வாறு குறிப்பிட்டான்.

விருந்தாளிகளாக வந்தோரால் எதிலியாக்கப்பட்டதுதான் மணலாற்று மக்களின் வரலாறு. இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமான பங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும் ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்த மண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை ஸ்ரீலங்கா அரசிற்கு அடிக்கடி உணர்த்தினார்கள்.

அரசன் ஒருவன் தான் கைப்பற்றும் இடங்களைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனது படை முகாம்கள் அல்ல. இதைவிட அவன் தனது இடத்து மக்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் சிறப்பாகச் செய்யலாம். அங்கு குடியேறும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப் போகிறவர்களாதலால் அவர்கள் எவ்வித இடர்களையும் எதிர் கொள்ளவும், அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பார். இது இளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியே நடைமுறைப்படுத்தியதால்தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியே முழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலை, மணலாறு என விரிவாக்கி வருகின்றது சிங்கள அரசு. ஆனால் இது தமிழீழ மண் என்று எல்லை போட்டுக் காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது வல்வளைப்பு படைகளின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதுக்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் இன்னொரு ஓதியமலை வரலாறு மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டது.

நெருக்கடி மிகுந்த காலகட்டங்களான, எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்த நாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையயும் பாதுகாக்க இவன் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள் பனிக்க கதைகதையாய் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் இளைஞர்களுக்கும், யுவதிகளிற்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டபடாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன்.

ஒற்றைக் கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும், இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டியது. அவ்வாறு உருவான அரசியல் போராளிகளால் ஈழ மண்ணை இன்றளவும் காத்து நிற்கின்றனர். களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான். ஆனால் இவனால் ஊட்டப்பட்ட . போராட்ட உணர்வு எதையும் மணலாற்று மண் மறந்துவிடவில்லை.

பின்னாட்களில் நவம் (டடி) அவர்களின் நினைவாக தேசியத்தலைவர் அவர்களினால் உருவாக்கப்பட்டதுதான் நவம் அறிவுக்கூடம். தாயக மண் மீட்பு போரில் மாற்றுத்திறனாளிகள் ஆக்கப்பட்ட போராளிகளை பேணிப் பாதுகாப்பதோடு அவர்களின் உளவுரணை மேம்படச் செய்து கடைசிவரை இப்போராட்டத்துக்கு ஒவ்வொருவரால் எது முடியுமோ அதைச் சாதித்துக் காட்டவும் உருவாக்கப்பட்டது நவம் அறிவுக் கூடம் என்ற நாமத்தோடு காட்சி அளித்திருந்தது.

நவம் அறிவுக்கூடம்.

லெப். கேணல் நவம் அவர்களின் ஞாபகார்த்தமாக நவம் அறிவுக்கூடம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் உருவாக்க்கப்பட்டது தாயக மீட்பு போரிலே அங்கவீனமான போராளிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் உருவாகிய ஒன்று. லெப் கேணல் நவம் அறிவுக் கூடம்.

இவ் நவம் அறிவுக்கூடம் நிலையத்திலே இருக்கும் போராளிகள் எமது தமிழீழ விடிவிற்கான போராட்டத்திலே பங்களித்து தம் அங்கங்களை இழந்தும் அல்லது முழுமையாக அங்கங்கள் செயற்படாது இருப்பினும் இன்னும் தாயகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் எனும் துடிப்புடன் இருக்கிறார்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் ஒரு நேர்காணலில் ‘ தமிழீழம் கிடைத்த பிறகு என்ன செய்வீர்கள்?’
என்ற கேள்விக்கு கூறிய பதில்

‘ ஆட்சியை பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு போரில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் பணிக்கு சென்று விடுவேன்‘ என்றார்.
இந்த பதிலிலிருந்து அவரது நேர்மையையும் பண்பையும் மட்டுமல்ல போரில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அன்பையும் அக்கறையையும் அவர்களை பாதுகாக்க வேண்டிய சமூக அக்கறையையும் புரிந்து கொள்ளலாம்.

தமிழீழ நடைமுறை அரசில் ” நவம் அறிவுக் கூடம் ” என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் பணி மட்டுமல்ல அவர்களை துறைசார் வல்லுனர்களாக வளர்த்தெடுக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டது.

போரியல் கலையில் மட்டுமல்ல கலை, அறிவியல், தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்று பல துறை சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் திகழ்ந்தார்கள்…

லெப்.கேணல் நவம்

படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். உனக்கு ஒரு கையில்லை இனி வீட்டிலேயே இரு. அன்பின் மேலீட்டால் இப்படியொரு வேண்டுகோளை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கினறது. தனக்கு இரக்கம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் சரியானவேளையென முடிவெடுக்கிறான்.

“எனக்கு இன்னொரு கை இருக்கு”. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது! அவனது சொற்கள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தமது தவறை எண்ணி நாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு கிட்டு எப்படி நம்பிக்கை ஒளியாக, வழிகாட்டியாக திகழ்கின்றாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களை இழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறான் அவன். அவன்தான் டடி.

டடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி. இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலைப் நாட்டில். போராடியது வன்னிக் காளங்களில். வன்னியை காதலித்த…. வன்னிக் களத்திலே காயமுற்ற இவன் உயிர் பிரிந்தது தமிழகத்தில்.

பசிலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகிய ஒரு போராளி கூறிய சொற்கள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமாக சில ஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்குப் பெயர் போனவன் பசீலன். சிறந்த மதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும் ஒருவரிடத்தில் கண்டதால்தான் நவத்தைப் பற்றி அப் போராளி இவ்வாறு குறிப்பிட்டான்.

விருந்தாளிகளாக வந்தோரால் எதிலியாக்கப்பட்டதுதான் மணலாற்று மக்களின் வரலாறு. இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமான பங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும் ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்த மண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை ஸ்ரீலங்கா அரசிற்கு அடிக்கடி உணர்த்தினார்கள்.

அரசன் ஒருவன் தான் கைப்பற்றும் இடங்களைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனது படை முகாம்கள் அல்ல. இதைவிட அவன் தனது இடத்து மக்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் சிறப்பாகச் செய்யலாம். அங்கு குடியேறும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப் போகிறவர்களாதலால் அவர்கள் எவ்வித இடர்களையும் எதிர் கொள்ளவும், அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பார். இது இளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியே நடைமுறைப்படுத்தியதால்தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியே முழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலை, மணலாறு என விரிவாக்கி வருகின்றது சிங்கள அரசு. ஆனால் இது தமிழீழ மண் என்று எல்லை போட்டுக் காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது வல்வளைப்பு படைகளின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதுக்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் இன்னொரு ஓதியமலை வரலாறு மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டது.

நெருக்கடி மிகுந்த காலகட்டங்களான, எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்த நாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையயும் பாதுகாக்க இவன் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள் பனிக்க கதைகதையாய் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் இளைஞர்களுக்கும், யுவதிகளிற்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டபடாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன்.

ஒற்றைக் கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும், இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டியது. அவ்வாறு உருவான அரசியல் போராளிகளால் ஈழ மண்ணை இன்றளவும் காத்து நிற்கின்றனர். களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான். ஆனால் இவனால் ஊட்டப்பட்ட . போராட்ட உணர்வு எதையும் மணலாற்று மண் மறந்துவிடவில்லை.

பின்னாட்களில் நவம் (டடி) அவர்களின் நினைவாக தேசியத்தலைவர் அவர்களினால் உருவாக்கப்பட்டதுதான் நவம் அறிவுக்கூடம். தாயக மண் மீட்பு போரில் மாற்றுத்திறனாளிகள் ஆக்கப்பட்ட போராளிகளை பேணிப் பாதுகாப்பதோடு அவர்களின் உளவுரணை மேம்படச் செய்து கடைசிவரை இப்போராட்டத்துக்கு ஒவ்வொருவரால் எது முடியுமோ அதைச் சாதித்துக் காட்டவும் உருவாக்கப்பட்டது நவம் அறிவுக் கூடம் என்ற நாமத்தோடு காட்சி அளித்திருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment