விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

மேலும்

குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.

அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.

மேலும்

தமிழ் இனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தலைவர்…!

இனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தலைவர்10.10.87 இந்தியப் படைகள் புலிகள் மீது திடீரெனப் போர் தொடுத்த நாள். இத்திடீர்ப் போர்ப் பிரகடனத்திற்கு உடனடிக் காரணங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைதான்.

மேலும்

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசிற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன்

எம்ஜிஆர் என்கிற ஒரு ஆளுமை உலக புகழ் பெற்றிருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவருடைய அரசியல் உலக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அதில் மக்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட விடயம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை அவர் கையாண்ட விதம். எமக்கு என்ன தேவை என்பதை முழுமையாக உணர்ந்து இருந்தார். அது ஈழ மக்கள் மத்தியிலும், உலக தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய வரவேற்பினை பெற்று தந்தது எம்ஜியார் அவர்களுக்கு……

மேலும்

சுவிசில் மீண்டும் தளர்வு

பெருந்தொற்றுப் பேரிடாராக சுவிற்சர்லாந்து அரசால் நோக்கப்பட்டிருந்த மகுடநுண்ணிப் பெருந்தொற்று தற்போது சுவிஸ் அரசால் தொற்றுநோயாக மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் பொருளை சுக் மாநில அரச அதிபர் தெரிவித்த உவமையுடன் பார்த்தால், ஆம், மகுடநுண்ணி இன்னும் உலகில் முற்றும் முழுதாக ஒழியவில்லை, அப்படி ஒழியாதும் போகலாம், ஆனால் சுவிற்சர்லாந்து நலவாழ்வு நிறுவனங்களால், மருத்துவமனைகளால் இத்தொற்றுக்குள்ளானவர்களுக்கு மருத்துவம் அளிக்கமுடியும், தடுப்பூசி இடப்பட்ட பயன் இந்நோய்த்தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருக்கும், ஆகவே பேரிடர் பெருந்தொற்றிலிருந்து மகுடநுண்ணி (கோவிட்-19) தொற்றுநோயாக மட்டும் பார்க்கப்படும்.  

மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தாய்மார்கள் பொலீசாரால் தாக்கப்பட்டமையை கண்டித்து நடைபெறவுள்ள போராட்டத்திற்குக் அனைவரும் அணிதிரள வேண்டும்.

சிறிலங்காவின் ஆயுதப்படைகளாலும் துணை இராணுவக் குழுக்களலும் பல ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.குறிப்பாக 2009 மே மாதம் இனவழிப்பு யுத்தத்தின் முடிவில் – சிறிலங்கா ஆயுதப்படைகளிடம் சரணடைந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

மேலும்

30. 03. 2022 சுவிற்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் ஆற்றுப்படுத்துனர்கள் ஒன்றுகூடல்

சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் முதன் முறையாக பல்சமயத்தவர்களும் சமய ஆற்றுப்படுத்தல் (CAS Religious Care in Migration Contexts) பட்டயக் கல்வி பெற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுதிருந்தது.

மேலும்

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை

*கட்டமைப்புவகை தமிழினவழிப்பு செய்துவரும் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு தமிழர் நலன் கருதாமல் அடுக்கடுக்காய் உதவிகள் செய்து கொண்டிருப்பதற்கு கண்டனம் *

மேலும்

ஒற்றையாட்சி அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதனை தடுத்து தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பை உருவாக்க இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்திய வெளிவிவாகார அமைச்சருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கடிதம் ஒன்று இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக அக்கடிதம் அனுப்பப்பட்டது. ஒற்றையாட்சி அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதனை தடுத்து தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பை உருவாக்க இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்திய வெளிவிவகாரச் செயலர் ஊடாக இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் கடிதம் கிட்டுப்பூங்கா பிரகடனமும் இணைத்து யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் கையளிக்கப்பட்டது.

மேலும்