யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றி பேரினவாத சிங்கள இராணுவம் மற்றும் காவல்துறை சூழ்ந்து நின்று யாரையும் உள்நுளையவிடால் தடுத்து நிற்கின்ற சூழலில் ,தடைகளைத் தாண்டி உள் நுளைந்த மாணவர்களால் சுடரேற்றி தமிழின அழிப்பு மே 18 நினைவேந்தல் நினைவு கூரப்பட்டுள்ளது.
மேலும்Month: May 2021
முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி .
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும்யாழ் மாநகர சபையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.
முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தலைமையில் யாழ் மாநகர சபையில் கோவிட்-19 சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இன்று நடைபெற்றது.
மேலும்தீர்கமுடியாத கடன்களாய் , நெஞ்சுக்கூட்டுக்குள்,
ஆயிரம்,ஆயிரம் வலிகளை சுமந்து வந்த அந்த நாளை மறக்க முடியாமல் இதயம் கனக்குறது! சுக்குநூறாய் இதயம் நொருங்கியே போனது!அழகழகாய் இருந்த கனவுகள் கலைந்தே போனது!
மேலும்கப்டன் மாயவன்
கப்டன் மாயவன்செபஸ்ரியான்பிள்ளை சிவகுமார்.பிறப்பு:13.09.1975வீரச்சாவு . 18.05.1995சம்பவம். பலாலியிலிருந்து தொண்டமனாறு நோக்கி முன்னேறிய இலங்கைப் இராணுவத்துடனான நேரடிச் சமரின் போது.வீரச்சாவு .
மேலும்இசைப்பிரியாவின் துயிலறைக் காவியம்.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றைச் செதுக்கிய சிற்பிகளாக எங்கள் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் இறையோர் மாவீரர்கள். பல்வேறுசூழ்நிலைகளில், பல்வேறு களங்களில் வேறுபட்ட பணிகளில் தாய்மாண்ணுக்காகத் தம்மை ஈந்தவர்கள். 2009ம் ஆண்டு எமது ஆயுதப்போராட்டமானது மௌனிக்கப்பட்டுவிட்டது.
மேலும்அவுஸ்ரேலியாவில்.தமிழின அழிப்புக்கு நீதி கோரி.கவனயீர்ப்பு.காணொளி.
முள்ளிவாய்க்கால் வலி சுமந்த நாள்களை நினைவில் தாங்கி, தமிழின அழிப்புக்கு நீதி கோரி.அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு.காணொளி.
மேலும்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – வீடுகளில் அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடாவருடம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலே இடம்பெறுவது வழக்கம். இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது எமது உரிமை சார்ந்த, எமது விடுதலை சார்ந்த, எமது வாழ்வியல் சார்ந்த ஒரு நிகழ்வாக இருக்கிறது. கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட, அழிக்கப்பட்ட எமது தமிழினத்தின் துன்பியல் அனுபவங்களை நினைவு கூருவதாக அமைகின்ற ஒருநிகழ்வுதான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது.
மேலும்மே 18 – தமிழ் இனப்படுகொலையின் நினைவு நாள்.யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!
இவ்வாண்டு மே 18 தமிழினப்படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்டு நிறைவின் நினைவு நாளாகும். தமிழ் மக்களை கொடூரமாக அழித்ததோடல்லாமல் எமது நினைவுரிமையையும் அடக்கும் ஒரு மோசமான அரசின் ஆட்சியில் இந்த நினைவுகூரலை நாங்கள் எதிர் கொள்கின்றோம். எமது பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை திட்டமிட்டு அழித்த அரசு எமது மாணவரின் போராட்டத்தின் காரணமாக அதனை மீளக்கட்டியமைக்க வழிவிட்டது. இப்போது வருடாவருடம் எமது மக்கள் பொங்கும் உணர்வுகளோடு வந்து அழுது ஆறிச்செல்லும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் தூபியை மிலேச்சத்தனமாக அழித்ததோடு நினைவுக்கல்லையும் வஞ்சகமாக கவர்ந்து சென்று அராஜகம் புரிந்துள்ளது.
மேலும்தமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினை தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம்
தமிழர் தேசம் ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக சிங்கள தேசத்தின் இனவழிப்பிற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகிக்கொண்டே வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக 2006ம் ஆண்டு ஆரம்பித்த ஆக்கிரமிப்பு 2009ம் ஆண்டு அதியுச்சம் பெற்றது. இந்த இறுதியுத்தத்தின் போது 1,47,679 பொது மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை மறைந்த ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் அவர்கள் புள்ளிவிபரங்கள் மூலம் ஆதர பூர்வமாக நிறுவினார்.
மேலும்