தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலான இணையவழி கூட்டு நினைவேந்தல்.

தமிழ்த் இனத்தின் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இன படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.இன்றைய நினைவேந்தல் நிகழ்வை கொவிட்-19 பேரழிவு வைரஸ் பரவல் காரணமாக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றாகத் திரண்டு நினைவேந்த முடியாத நிலையில் வீடுகளில் இருந்து நினைவேந்துமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியிருந்தது.  

மேலும்

பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2021 பற்றிய அறிவித்தல்!

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2021 எதிர்வரும் 17-07-2021 சனிக்கிழமையன்று நடைபெறும்.தற்போதுள்ள இடர்மிகு நிலை காரணமாக இவ்வாண்டு வளர்தமிழ்-1 தொடக்கம் வளர்தமிழ்-12 வரையான வகுப்புகளுக்கு புலன்மொழிவளத் தேர்வு இல்லாமல், எழுத்துத்தேர்வு மட்டுமே நடைபெறும்.

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை மண்டியிடாது போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான கவனயீர்ப்பு நிகழ்வானது 18.05.2021 செவ்வாய் அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள திடலில் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

மேலும்

நியூசிலாந்தில் 12வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள்

நியூசிலாந்தில் 12வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள் Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) மிகஎழுச்சியுடன் நினைவு கூறப் பட்டது.

மேலும்

தமிழின அழிப்பு நினைவுநாள் நிகழ்வு.பிரித்தானியவில்.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான நீதி வேண்டி,பிரித்தானிய பிரதமர் இல்லம் இல 10 downing Street க்குமுன்பாக. இன்று (மே18) காலை 10 மணிக்கு உணவு தவிர்ப்புப் போராட்டத்துடன். 12ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் ஆரம்பமானது.

மேலும்

பிரான்சு சார்செல் நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

பிரான்சில் 95 மாவட்டம் சார்செல் நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 17.05.2021 திங்கட்கிழமை மாலை 18.00மணிக்கு நடைபெற்றது.

மேலும்

பிரான்சு வித்றி சூ சென் நகரில் இடம்பெற்ற மே 18 நினைவேந்தல்!

இன்று 17.05.2021 திங்கட்கிழமை பிரான்சின் புறநகர் மாநகரமாகிய வித்றி சூ சென் பகுதியில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் 15.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் 17ம் நாள் நினைவு சுமந்த கவனயீர்ப்பும் , வணக்க நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும்

பிரான்சின் பொபினிப் பிரதேசத்தில் மே 18 கவனயீர்ப்பு நினைவேந்தல்!

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 93 மாவட்டம் பொபினிப் பிரதேசத்தில் மாநகரசபை முன்றலில் இன்று (15.05.2021) சனிக்கிழமை மே 18 கவனயீர்ப்பும் வணக்கநிகழ்வும் நடைபெற்றன.

மேலும்

தாயகத்தில் பல இடங்களில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். அஞ்சலி நிகழ்வு.

இராணுவத்தின் தடைகளை தாண்டி நந்திக்கடலில் சிவாஜிலிங்கம், பீற்றர் இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளனர். யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

மேலும்