Read Time:1 Minute, 6 Second
இன்று 17.05.2021 திங்கட்கிழமை பிரான்சின் புறநகர் மாநகரமாகிய வித்றி சூ சென் பகுதியில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் 15.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் 17ம் நாள் நினைவு சுமந்த கவனயீர்ப்பும் , வணக்க நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வில் மாநகர உதவி முதல்வர் ரமல் அவர்களும் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். வரும் வாரத்தில் இப்பிரதேசத்தில் தமிழீழ தேசத்துக்கான ஆதரவுத்தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. அப்பிரதேச வாழ் தமிழ்மக்களும் , இவிறி சூர்சென் மக்களும் கலந்து கொண்டிருந்தனர். அரசியல் பிரிவு முள்ளிவாய்க்கால் இன்றைய நிலவரத்தை அறிக்கையாக பிரெஞ்சுப் பிரமுகர்க்கு வழங்கியிருந்தனர்.












