ஆயிரம்,ஆயிரம் வலிகளை சுமந்து வந்த அந்த நாளை மறக்க முடியாமல் இதயம் கனக்குறது! சுக்குநூறாய் இதயம் நொருங்கியே போனது!அழகழகாய் இருந்த கனவுகள் கலைந்தே போனது!
அந்த நொடிப்பொழுது திக்கு,திசை எதுவுமே தெரியாமல் தத்தளித்தது மனசு!வாழ்க்கையாகிப்போன அந்த அழகிய வாழ்வு இல்லையென்று ஆகிப்போனது!அடிவயிற்றுக்குள் அப்படியே ஏதோ பிசைந்து ,கண்கள் இருட்டி,கால்கள் தடுமாறி ,கைகள் வலுவிழந்து,உடல் சோர்ந்து,நினைவிழந்து போனது,சித்தபிரமை பிடித்ததுபோல் இலக்கற்ற நடைப்பயணம்!கால்கள் வைக்கும் இடமெல்லாம் எம் உறவுகளின் பிஞ்சுபோன உடலங்கள் ,கட்டிஅணைத்து கதறிஅழ முடியாமல்,கனத்த இதயத்தோடு ஒருமுறை வந்த வழி திரும்பிப்பார்த்தால்,,,,,,என் காதல் தேசம்,என் கனவு தேசம்அதர்மம் என்ற கரும்புகையில் மூழ்கி கண்களையே இருட்டாகீற்று!சொந்த உறவுகளையே தொட்டுப்பார்க்க முடியாமல் சொந்ததேசத்திலையே சிறை பிடிக்கப்பட்டோம்!கட்டுப்படுத்த முடியாமல்கதறி அழுதோம், எவர் காதிலும் விழவில்லை,கண்மணிகளாக கண்ணுக்குள்ளே வைத்து வளர்த்தவர்களை எல்லாம் கண்முன்னே வேட்டையாடியது சிங்கள வெறிக்கூட்டம்!கதறக் கதற கடித்து குதறியது அந்த மிருகக்கூட்டம்!!!!!மறக்கமுடியவில்லை, மறக்கமுடியவில்லை எம்மால் ஒட்டுமொத்தமாக எல்லோரையும் இழந்து அனாதைகளாக்கப்பட்ட அந்த நாளை!!!!மறக்கமுடியவில்லை!! எம்உரிமைகளை தட்டிப்பறித்து ,எம் உறவுகளை சதைபிண்டங்களாக்கி,எம் உணர்வுகளை கொடூரமாக அழித்து, எமையெல்லாம் அனாதைகளாக்கிய சிங்கள வெறியனே! பொறுத்திரு!தர்மம் ஒருநாள் நிச்சயமாக தலை நிமிரும்!!!!
-கலைவிழி-