மட்டக்களப்பு நகரில் 19.03.2021 அன்று காலை நடாத்தப்படவிருந்த இனப்படுகொலைக்கு நீதி கோரி சாத்வீகமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தடையுத்தரவு வழங்கி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்களுக்கு வாழைச்சேனை போலீசாரினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவு 18.03.2021 பிற்பகல் 5.45 மணியளவில் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்Month: March 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவித்துள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தற்போது மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் 46.1 என்ற உத்தேச தீர்மானம் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராது என்றும் குற்றஞ்சாடியுள்ளார்.
மேலும்முன்னாள் நிதர்சனப் பொறுப்பாளராகப் பணியாற்றிய படப்பிடிப்பாளர் பரதன் அவர்கள் காலமானார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் நிதர்சனப் தொலைக்காட்சி பொறுப்பாளராகவும் இருந்த படப்பிடிப்பாளர் பரதன்( இராசநாயகம் பரதன் ) அவர்கள் சற்றுமுன் லண்டனில் இன்று மார்ச் 18இல் மாரடைப்பால் காலமானார். அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.
மேலும்சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு
நேற்று சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தின் புகையிரத நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று அக்கினிப் பறவைகள் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டது .
மேலும்பொண்டி நகரசபை முதல்வருடன் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
நேற்று பொண்டி நகரசபை முதல்வருடன் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. 72 வருடங்களாக நடைபெற்றுவரும் தமிழின அழிப்புத் தொடர்பான அனைத்து விடையங்களும் நகரசபை முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும்கிட்டு பூங்காவில் இருந்து நல்லூர் வரை இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
தமிழர்களுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணம் – கிட்டு பூங்காவில் இருந்து நல்லூர் வரை இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மேலும்மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களை தேடி வலைவீச்சு? ஊடகவியலாளர் சசிகரனை குற்ற விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பு!
மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களை தேடி பொலீசார் வலைவீசி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து செய்திகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை விசாரணை செய்யும் நோக்குடன் ஊடகவியலாளர்களின் வீடுகளை தேடிச் சென்று பொலீசார் அழைப்பு கடிதங்களை வழங்கி வருகின்றனர்.
மேலும்அம்பிகையின் உண்ணாவிரதப்போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்ள்ளது.
பிரித்தானியாவில் தொடரப்பட்ட அம்பிகையின் உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் (15.03.2021) முடிவுக்கு கொண்டு வரப்பட்ள்ளது.
மேலும்சர்வதேசத்திடம் நீதிகோரிஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பொலீசார் அச்சுறுத்தல்.
மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் சர்வதேசத்திடம் நீதிகோரிஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கும் கைதுசெய்வதற்கும் பொலிஸார் மேற்கொண்ட முயற்சி காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
மேலும்யாழ்ப்பாணத்தில் புதனன்று நடைபேறும் பேரணிக்கு மணிவண்ணன் அழைப்பு..
யாழ்ப்பாணத்தில் கிட்டுப் பூங்காவில் இருந்து .எதிர்வரும் 17.03.2021 புதன்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமாகும் பேரணியில் கலந்து கொண்டு எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபடுவோம் வாரீர்…பேரணிக்கு மணிவண்ணன் அழைப்பு
மேலும்