மகிந்தவின் யாழ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் – 19.03.2022

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும்

கந்தரோடையில் புத்தவிகாரைக்கு அடிக்கல் நாட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டது!

சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கந்தரோடையில் புதிதாக அமைக்கப்படவிருந்த விகாரைக்கு அடிக்கல் நாட்டும் தனது திட்டத்தை மக்களின் எதிர்ப்பையடுத்து கைவிட்டு திரும்பியுள்ளார்.

மேலும்

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம்படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின்நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது நினைவினை முன்னிட்டு 25வது தடவையாக நடைபெற்ற வளர்ந்தோருக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 13.03.2022 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள றுயமெனழசக் உள்ளரங்க மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி பிரான்சு 2022

பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022. இன் 2 ஆம் நாள் போட்டிகள்.இன்று  (13.03.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 -மணிக்கு – 8 Avenue du Stade 95200 Sarcelles மைதானத்தில் நடைபெற்றது.

மேலும்

வவுனியாவில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக பேரணி

கிட்டுபூங்கா பிரகடனத்தை மீளவும் உறுதிப்படுத்தல்‘தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்’ ‘தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டித் தீர்வை வலியுறுத்துவோம்’ என்னும் அடிப்படையில் தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் 2022 தை 30ம் திகதியன்று, யாழ் நல்லூர் கிட்டு பூங்காவில் வெளியிடப்பட்ட பிரகடனத்தை மீளவும் உறுதிப்படுத்த, வவுனியா தாண்டிக்குளம் ஐயானார் விளையாட்டுக்கழக மைதானத்தில் 2022 பங்குனி 13ம் திகதியாகிய இன்று தமிழர்கள் நாம் பல்லாயிரமாய்த் திரண்டு நிற்கின்றோம்.

மேலும்

லெப்.கேணல் ஜொனி அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

மேலும்

வவுனியா பேரணிக்கு அனைரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

2022.03.12ஊடக அறிக்கை வவுனியா பேரணிக்கு அனைரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.புதிய அரசியல் யாப்பினை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை சிங்கள பௌத்த பேரினவாத அரசு முன்னெடுத்துவருகின்றது. சிறீலங்காவுக்கான நான்காவது அரசியல் யாப்பும் மிக இறுக்கமான சிங்கள பௌத்த ஆதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசியல் யாப்பாகவே அமையவுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தரப்பின் கடமையானது ஒற்றையாட்சியை முற்றாக நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.

மேலும்

ஒற்றையாட்சிக்கெதிரான மக்கள் சந்திப்பு மன்னாரில்!

தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதி முயற்சிக்கெதிராகவும், வடக்குகிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் மன்னாரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு.

மேலும்

முல்லைத்தீவு இந்துபுரம் முன்பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது!

தூயகரங்கள் சமூக அபிவிருத்தி அமையத்தின் நிறுவுனர் தம்பி ஐயா அவர்களின் பாரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூயகரங்கள் சமூக அபிவிருத்தி அமையத்தின் நிதியுதவியில் முல்லைத்தீவு இந்துபுரம் முன்பள்ளி சிறார்கள் 54 பேருக்கான சீருடைகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும்

ஒற்றையாட்சிக்கெதிரான மக்கள் சந்திப்பு வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில்!

தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும்சதி முயற்சிக்கெதிராகவும், வடக்குகிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் வவுனியாவில் இம்மாதம் எதிர்வரும் 13.03.2022அன்று நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் பேரணிக்கு வலுவூட்டும் வகையில் இன்று வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணிகளான காண்டிபன், சுகாஸ் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும்