வவுனியா வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் உறவுகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

வலிந்துகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதியைக் கோரி பல வருடங்களாக போராடிவரும் வவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளிற்கும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்குமிடையில் இன்று (08.03.2022) சந்திப்பொன்று நடைபெற்றது.

மேலும்

ஐ.நா முன்றலில் குளிர்காலநிலையிலும் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்மக்கள்!!

சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதின்மூன்றாவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்கா அரசபயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் குளிர்காலநிலைக்கு மத்தியிலும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும்

பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகின!

பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022 நேற்று (06.03.2022) ஞாயிற்றுக்கிழமை parc interdépartemental des sports paris val de marneChemin des bœufs94000 Creteil. மைதானத்தில் ஆரம்பமானது.

மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மீதான பொலிஸாரின் தாக்குதலிற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!

“பொலீசாரினதும் அரச கட்சியினதும் அராஜகத்தை அனுமதிக்க முடியாது!”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மற்றும் அவரது சகோதரிகளை அரச கட்சியினரும் பொலீசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்…இது அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் அரச கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கொடூர முகத்தையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கின்றது…இத் தாக்குதலை ஜனநாயகத்தையும் சட்ட திட்டங்களையும் மதிக்கின்ற அரசியல் இயக்கமாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்கமாட்டாது.

மேலும்

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்.

கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும், தமிழீழமே தீர்வு எனவும் முக்கிய அரசியல் மையங்களில் வலியுறுத்தியபடி 7 நாடுகளை கடந்து ஐ.நா முன்றலை 1500Km பயணித்து இன்று 06/03/2022 எழுச்சிகரமாக வந்தடைந்தது.

மேலும்

18ம் நாளாக (05/03/2022) தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும்அறவழிப்போராட்டம்.

சுவிசு பயேர்ன் , மாநகரசபை முன்றலில் இருந்து எழுச்சி கரமாக மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்தொடர்ந்தது. சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலகசுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு என கடும் மலை ஏற்றத்தின் மத்தியிலும் நெடுந்தூரம்பயணித்து லெளசாண் மாநகரத்தினை வந்தடைந்தது. மாநகர முதல்வரிடம் மனு ஒப்படைக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. நாளை மீண்டும் லெள்சான் மாநகரத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் அவை (ஈகைப்பேரொளிமுருகதாசன் திடல்) முன்றலினை நோக்கி தொடர்கின்றது.

மேலும்

வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி- சுவிஸ் 13.03.2022

இவ் விளையாட்டுப் போட்டிகளிற்கு அனைத்து விளையாட்டுக் கழகங்களையும், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

மேலும்

17ம் நாளாக (04/03/2022) தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி அறவழிப்போராட்டம் தொடர்கிறது.

சிறிலங்கா பேரினவாத அரசானது தமிழர்களை இரசாயன, கொத்துக்குண்டுகளாலும், பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தும், வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்தவர்களை படுகொலை செய்தும், வயது பால் வேறுபாடுகளின்றி திட்டமிட்டமுறையில் உணவு ,மருந்துகள் மறுத்த நிலையிலும் இனப்படுகொலை செய்து அதற்கான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் பல கபட நாடகங்களையாடி வருகின்றனர்.

மேலும்

வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி- சுவிஸ்

இவ் விளையாட்டுப் போட்டிகளிற்கு அனைத்து விளையாட்டுக் கழகங்களையும், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றோம். நன்றி,விளையாட்டுத்துறைசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.  

மேலும்