லிபரேசன் ஒப்பரேசன் படுகொலைகள் 34 ஆவது வருட நினைவுகள்..!

0 0
Read Time:11 Minute, 26 Second

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் குடாநாட்டில்அமைந்துள்ள வடமராட்சியைக் கைப் பற்றும் நோக்கில் பெரும் எடுப்பில் மேற் கொள்ளப் பட்ட வலிந்த தாக்குதலாக வடமராட்சி லிபரேசன் ஒப்பரேசன் அல்லது லிபரேசன் அல்லது வடமராட்சி நடவடிக்கை என்று பெயர்சூட்ட்பபட்ட இந்த இராணுவ நடவடிக்கை 1987 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இடம் பெற்றது.

வடமராட்சியின் மீது இராணுவம், கடற்படை, விமானப் படையினர் இணைந்து மேற்கொள்ள பபட்ட “வடமராட்சி லிபரேசன் ஒப்பரேசன்” 1987 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 5 நாட் களாக இடம்பெற்ற போரில் 817 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன்,14000 மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக்கப்பட்டனர்.
பிரித்தானியர் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இலங்கை இராணுவம் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட முதல் மரபுப் போராக இந்த இராணுவ நடவடிக்கை அமைந் துள்ளது.
இந்தப்பாரிய இராணுவ நடவடிக்கைக்கு பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ, கேர்ணல் விஜய விமலரத்ன ஆகியோரின் தலைமையில் பல்வேறு படையணிகளில் இருந்தும் (பற்றாலியன்கள்) தெரிவு செய்ய்பபட்ட 8000 படையினரைக் கொண்ட இலங்கை இராணுவத்தை வழிநடத்தியதோடு அப்போதைய இலங்கை சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா, பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஆகியோர் இதற்கான அரசியல் தலைமைத்துவத்தையும் ஆலோசனைகiளையும் வழங்கியிருந்தனர்.
ஸ்ரீலங்கா அரசின் கூட்டுப் படை நடவடிக்கைகளின் முதல் கட்டமாகஇ எந்த விதமான அரச எதிர்ப்பு நடவடிக்கைளிலும் ஈடுபட்டிருக்காத அப்பாவித் தமிழர்களை சொந்த வீடுகளில் இருந்து விரட்டி அடித்து அவர்களது நிலங்களைக் கைப்பற்றும் ஒரு இனவாத நடவடிக்கையாக இது அமைந்தது. இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பலாலியில் கூட்டுப் படைத் தளத்தில் இருந்து இருந்து வெளிவந்த இராணுவத்தினர் வசாவிளான், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் முன்னேறினர். இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பெருந்தொகை மக்கள் இடம்பெயர்ந்தனர். இதில் பெரும்பாலான தமிழர் களின் வீடுகள் எவ்வித காரணமும் இன்றி புல்டோசர்கள் மூலம் இடிக்கத்தழிக்கப்பட்டது. அதுவரை இந்தியாவுக்கு விமானம் மூலம் பயணம்; செய்யப் பயன்படுத்தப்பட்ட பலாலி விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கான சர்வதேச விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு அந்தப் பிரதேசம் முழுமையாக இராணுவ, விமானப் படைகளின் தளமாக்கப்பட்டது. அதனை அடுத்து பல நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் பூர்விகப் பிரதேசங்களைப் பலாத்காரமாகப் பறிமுதல் செய்து பலாலி விமான நிலையமும் விஸ்தரிக்கப்பட்டது. இன்றும் இப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புவதற் கான உரிமைகள் மறுக்கப்படு கின்றது. பலாலி விமானப் படைத்தளத்தை விஸ்தரிப்பதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சொந்த ஊரான வல்வெட்டி;ததுறை நகரத்தையும் அதனைச்சுற்றியுள்ள உடுப்பிட்டி, பொலிகண்டி ஆகிய கிராமங்களையும் தமது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து விடுதலைப்புலிகளின் செயற்பாடு களை முற்றாக நிறுத்துவதே அப்போதைய பாதுகாப்பு அமைசசராக இருந்த லலித் அத்துலத் முதலியின் இலக்காகவும் இருந்தது. இந்தப் படை நடவடிக்கையில்,முன்னாள் பாதுகாப்பு செயலாள ராக இருந்த மேஜர்.கோத்தபாய ராஜபக்சா, மேஜர்.சரத் பொன்சேகாஇபிறிகேடியர். ஜி.எச்.டீ சில்வா, லெப்டினன்ட் கேணல் நாரத விக்கிரமரத் தினா போன் முக்கியமான இராணுவ உயர் அதிகரிகள் இத்தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்றிருந்தனர்.
விமானம்,தரைவழி மற்றும் கடல்வழித் தாக்குதல் கள் என மும்முனைகளிலும் படையினர் முன்னேறிச் சென்றனர்.

படையினர் வெறிகொண்டவர்களாக முன்னேறிச் செல்லும் வழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களையும் கைது செய்து கப்பலில் ஏற்றி புதிதாக இதற்காகவே திறக்கப்பட்ட பூசா தடுப்பு முகாமுக்கு ஏற்றிச் சென்றனர். ஆங்கே கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இதுவரை திரும்பவேயில்லை. அதேவேளை போகும் வழியெங்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடுகளின்றிச் சுட்டும் எரித்தும், படுகொலைகள் செய்து கொண்டே சென்றனர். இடம்பெயர்ந்து சென்றவர்கள் வதிரி,புற்றளை,அல்வாய் போன்று கிராமங்களில் சில வீடுகளிலும், ஆலயங்களிலும், பாடசாலைகளிலும் அகதிகளாகத் தங்கி யிருநதனர். இவ்வாறு ஆலயங்களில் தங்கியிருந தவர்களை அடையாளம் கண்ட நிலையில் அல்வாய் முத்துமாரி அம்மன் கோயிலை நோக்கி,பலாலி இராணுவ முகாமில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட எறிகணைகள்விழுந்து வெடித்ததால்,ஆலயத்தினுள் தஞசம் அடைந்திருந்த சுமார் 200 பேர் வரையான தமிழர்கள்உடல் சிதறிப் பலியாகினர். வடமராட்சி எங்கும் மேற்கொள்ளப் பட்ட “லிபரேசன் ஒப்பரேசன் தாக்குதலில்” 850வரையான தமிழர்கள் கொல்லப் பட்டதுடன்,ஏறத்தாழ 40000 பொது மக்கள் பாதிக்கப் பட்டுத் தமது குடியிருப்புக்களை இழந்து அகதிகளாக்கப்பட்டனர்.

வடமராட்சி லிபரேசன் நடவடிக்கைத் தாக்குதலின் இலக்காக இருந்த வடமராட்சியின் முழுப்பிரதேச மும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா அரச படையினர் வடமராட்சியின முக்கிய பிரதேசங் களான தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி,நெல்லியடி, பருத்தித்துறை,மந்திகை ஆகியவற்றைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து ஒவ்வொரு இடங்களிலும் சிறு முகாம்களை அமைத்தனர். வடமராட்சியின் முக்கிய படைத் தளமாக நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத் தில் சுமார் 1500 இராணுவத்தினரைக் கொண்ட பாரிய படைமுகாம் அமைக்கப்பட்டு வெற்றி விழாக் கொண்டாடினார்கள்.
அதேவேளை, இந்த இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து தெருக்களில் மனிதர்களின் உடல் களுடன் நூற்றுக்கணக்கான ஆடுகள், மாடுகள், நாய்கள் என்பனவும் இறந்து காணப் பட்டன. …..பல நாட்கள் வரை தெருவெங்கும் பிணவாடைகள் வீசிக் கொண்டிருந்தன.

வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் தாக்குதலைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் இந்திய வான்படை இலங்கையின் வான்பரப்பிற் குள் நுழைந்து “பூமாலை நடவடிக்கை” என்ற பெயரில் இலங்கையின் இறைமையையும் மீறி, யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்ட பொட்டலங்களை வீசியது,இதன் பின்னரே இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக் கும் இடையில் ஒரு தலைப் பட்சமாக 1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29 ஆம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதில் தான் ஜேஅரின் தந்திரம் வெளிப்படுத்தப் பட்டது. அவர் ” 40 வயதை 40 வருட அரசியல் அனுபவம் உள்ள நான் வென்று விட்டேன்’ என்று குறிப்பிட்டது ஜேஆரின் மதிநுட்பத்திற்கு முன்னால் ராஜிவ் காந்தியின் அனுபவம் தோற்றுப் போய் விட்டது என்பதைத் தான் புலப்படுத்த கின்றது.

வடமராட்சி லிபரேசன் ஒப்பரேசன் தாக்குதல் தொடர்பாக 2012 ஆம் ஆண்டில் Jesse Russell மற்றும் Ronald Cohn ஆகியோரினால் எழுதி வெளியிடப்பட்ட ““Vadamarachchi Operation” (146 Pages) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதையும் பார்வையிடலாம்.

ஸ்ரீலங்கா அரசின் ஆயுதப் படையினரால் கொல்லப் பட்டும் காணாமல் போயுமுள்ள எமது தமிழ் உறவு களுக்கு எமது நெஞ்சம் நெகிழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்-

முன்னாள் செயலாளர்- வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு
” அன்று பிறந்திருக்காத தமிழர்களும், தமிழ் மக்களை நட்டாற்றில் தவிக்க விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்து இந்திய அரசின் இராணுவ நடவடிக்கைகளை ஆதரித்து நின்ற தமிழ் அரசியல் வாதிகளும், அறியவேண்டு மென்பதற்காக இந்தப் பதிவுகள் தரப்படுகின்றன”.

தகவல் நன்றி: இகுருவி பத்திரிகை-மே-18 சிறப்பிதழ்-கனடா – “ ஈழத்தின் படுகொலைகளின் துயரம் நிறைந்த வரலாறுகள்”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment