தூர்வாரப்படாமல் பாழடைந்த நிலையில் இருந்த ஓட்டுமடம் துரும்பை குளம் புனரமைப்பு பணி ஆரம்பம்

0 0
Read Time:1 Minute, 30 Second

சுமார் 50 வருட காலமாக தூர்வாரப்படாமல் பாழடைந்த நிலையில் இருந்த ஓட்டுமடம் துரும்பை குளத்தினை தூர்வாரி பொழுது போக்கு மையமாக மாற்றி அமைக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குளத்தினை புனரமைப்பதற்கு ஓட்டுமடம் உதவும் கரங்கள் அமைப்பு முன்வந்துள்ளனர். குறித்த குளமானது கைவிடப்பட்ட நிலையில் இருந்தமையால் பலராலும் குப்பை மற்றும் விலங்கு இறைச்சி கழிவுகளை வீசும் இடமாக மாறி துர்நாற்றம் வீசும் இடமாக மாறியிருந்தது. குறித்த குளத்தை தூர் வாரி தருமாறு அப்பிரதேச மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில் இப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஷ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர சபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்திபன், நிபாகிர், நியாஸ் ஓட்டுமடம் உதவுங்கரங்கள் அமைப்பின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் திரு ஓங்காரமூர்த்தி, சமூக செயற்பாட்டாளர் யெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment