01. 03. 21 முதல் சுவிசின் முடக்கத் தளர்வு

1 0
Read Time:10 Minute, 1 Second

 
கடந்த 18. 01. 2021 முதல் நடைமுறைக்குப்படுத்தப்பட்ட இறுக்க நடவடிக்கைகள் சிலவற்றை தளர்த்தும் அறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என முன்னரே சுவிசரசு அறிவித்திருந்தது. இதன்படி 24. 02. 2021 புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுவிற்சர்லாந்து நாட்டின் அதிபர் திரு. குய் மார்மெலின் மற்றும் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே ஆகியோர் பங்கெடுத்து 01. 03. 2021 முதல் நடைமுறைக்கு வரும் தளர்வுகளை அறிவித்தனர்.
 

அனைத்துக் கடைகளும் திறக்கப்படும்

திறந்தவெளியில் பொழுதுபோக்கு நிலையங்கள் திறக்கப்படலாம்

அருங்காட்சியகங்கள், வாசிப்புமண்டபம், ஆவணக்காப்பகம் திறக்கலாம்

திறந்தவெளியில் ஆகக்கூடியது 15 ஆட்கள் ஒன்றுகூடலாம்

20 வயதிற்கு உட்பட்டோர் விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கெடுக்கலாம் (2001ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பிறந்தோர்)

வீடுகளில் தனியார் ஒன்றுகூடலில் ஆகக்கூடியது 5வர் மட்டுமே பங்கெடுக்கலாம்

விழாக்கள் கொண்டாடத் தடை தொடர்கின்றது

உணவகங்கள் தொடர்ந்தும் பூட்டப்பட்டிருக்கும்

உயர் கல்வி தொடர்ந்தும் இணையவழியில் நடைபெறும்

குடும்ப வட்டத்தில் 20 வயதிற்கு உட்பட்டோர் மட்டுமே பாடலாம்

முகவுறை தொடர்ந்தும் கட்டடத்திற்குள் வெளியிலும் அணிந்திருக்க வேண்டும்

வாய்ப்புள்ளோர் தொடர்ந்தும் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டப்படுகின்றனர்

 
தொற்றுத் தொகை குறையவில்லை
 
கடந்த நாட்களில் சுவிசில் மகுடநுண்ணித் தொற்றின் தொகையினைப் பார்த்தால், பெருந்தொற்று கட்டுக்குள் இல்லை என்ற தோற்றத்தை அளிக்கலாம். ஆனால் அதன் காரணம் உருமாறித் திரிவடைந்த நுண்ணிகள் ஆகும். தொற்றுத் தொகை அதிகமாக இருந்தபோதும், மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்வோர் தொகை குறைவாகவே உள்ளது. சுவிற்சர்லாந்தின் அண்டைய நாடுகளிலும் இதுவே நிலையாக உள்ளது. ஆகவே நாம் படிப்படியாக தளர்வுகளை அறிவிப்போம். மார்ச் நடுப்பகுதியில் அடுத்த முடிவு அறிவிக்கப்படும் என்றார் சுகாதார அமைச்சர் திரு. பெர்சே.
 
 

  1. 21 முதல் கடைகள் திறப்பு
     
    எதிர்வரும் கிழமை முதல் அனைத்துக் கடைகளும் திறக்கப்படும். அதுபோல் அருங்காட்சியகங்கள், வாசிப்புமண்டபங்கள், ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள் மூடப்பட்ட கதவினைத் திறந்துகொள்ளலாம். அதுபோல் கட்டடத்திற்குள் அல்லாது திறந்தவெளியில் நடைபெறும் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக விலங்குக்காட்சியகங்கள், தாவரவியல்பூங்கா, நேருணர்வுப்பொழுதுபோக்குப்பூங்கா என்பன திறக்கப்படலாம்.
     
     
    இளவயதினருக்கு விடுதலை
     
    முதலில் 16 வயதிற்கு உட்பட் இளையோர்களுக்கு உதைபந்தாட்டப் பயிற்சி, பாடல் ஒத்திகை ஆகியவற்றில் பங்கெடுக்க ஒப்புதலை அளித்திருந்த சுவிஸ் அரசு, தற்போது அதன் வயதெல்லையை 20தாக உயர்;த்தி இளையவர்களுக்கு 01. 03. 21 முதல் சிறு விடுதலையை அளித்துள்ளது.
     
    ஆனாலும் ஒரு குடும்பத்தில் விருந்தினராக ஆகக்கூடியது 5வர் எனும் விதி தொடர்கிறது. நான்கு சுவற்றுக்குள் குறுகிக்கொள்ளும் காலம் ஆகக்குறைந்தது மார்ச் 2021 வரை தொடரவுள்ளது.
     
     
    திறந்தவெளியில்
     
    தனிப்பட்ட நிகழ்வுகள் ஆகக்கூடியது 15 ஆட்கள் பங்கெடுக்கும் வகையில் நடைபெற நடுவனரசு ஒப்புதல் அளித்துள்ளது. செயற்கை உறைபனிசறுக்கும் விளையாட்டு, வரிப்பந்து விளையாட்டு (ரெனிஸ்) மற்றும் உதைபந்தாட்டதிடல்கள் மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டு அரங்குகள் மீண்டும் திறக்கப்படலாம்.
     
     
    விருந்தோம்பல்துறை
     
    மேழத்திங்கள் (சித்திரை) முதல் உணவங்கங்கள் மீண்டும் திறக்க ஒப்புதல் அளிக்கப்படலாம். பல மாநிலங்களும் 22.03.21 உணவங்கள் திறக்க வேண்டுகை வைத்துள்ளன. உணவங்களை திறந்துகொள்ளலாம் என அறிவிப்பது இப்போது பொருத்தம் அல்ல என சுவிஸ் அரசு கருதுகின்றது. அதிக மக்கள் குறுகிய இடங்களில் ஒன்றுகூடுவதைத் தடுப்பது பெருந்தொற்றுத் தவிர்ப்பில் மிகவும் தேவை என சுவிஸ் அரசு கருதுவதாக அறிவிக்கப்பட்டது.
     
    இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே, தொற்றுக் கட்டுக்குள் இருப்பின் 22. 03. 21 முதல் உணவகங்கள் திறக்க வாய்ப்பு உள்ளதாக ஊகம் தெரிவித்தார்.
     
    எடுத்துச் செல்லும் உணவங்கள், பாடசாலை உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் அதுபோல் தங்குவிடுதியின் விருந்தினர் உணவகம் என்பன தற்போது உள்ளதுபோல் தொடர்ந்தும் திறந்திருக்கலாம். பொதுவான உணவகங்களின் வெளிப்பகுதி, அடுக்குத்தளம் என்பன பெரும்பாலும் மேழத்திங்கள் முதற்கிழமை முதல் திறக்கப்படலாம்.
     
     
    மாநிலங்கள் திறந்தவெளிப்பகுதியை திறக்க விரும்புகின்ற
     
    சுவிசின் நடுவனரசுடன் பேச்சுவார்தையில் கடந்த கிழமை ஈடுபட்டிருந்த பல மாநிலங்களும் சுவிஸ் அரசின் எண்ணத்திலிருந்து மாறுபட்டு, விருந்தோம்பல் துறைக்கு முற்கூட்டிய தளர்வுகளை வேண்டுகின்றன.
     
    பல மாநிலங்களும் உணவகங்கள் மீனத்திங்கள் (மார்ச்) முதல் திறந்த வெளியில் இயங்குவதற்கு சுவிசரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தம் விருப்பத்தை தெரிவித்துள்ளன.
     
    கடந்த ஞாயிறு இக்கோரிக்கையினை கிறவ்புந்தென், ரிச்சீனோ, ஊறி, பிறைபூர்க், தூர்க்காவ் ஆகிய மாநிலங்கள் வலியுறுத்தி இருந்தன. அறோ மாநிலம் மட்டும் நடுவனரசின் முன்மொழிவை முழுமையாக வழிமொழிந்த மாநிலமாக உணவங்கள் ஏப்பிரல் திறந்தால் நன்று என நடுவனரசின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளது. 
     
    கடந்த வெள்ளிக்கிழமை அப்பென்செல் இன்னெர்கோடென், கிளாறுஸ், ஆகிய மாநிலங்கள் மார்ச் முதல் திறந்த வெளியிடங்களில் உணவகங்கள் பணிசெய்ய ஒப்புதல் கேட்டு சுவிற்சர்லாந்து நடுவனரசிடம் விண்ணப்பித்துள்ளன. வோ மாநிலம் 15. 03. 21 முதல் உணவங்கள் பகல் பொழுதுகளில் திறந்திருக்க நடுவனரிசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
     
    இதுபோல் கடந்த சனிக்கிழமை செங்காளன், அப்பென்செல் அவுசெர்கோடென் ஆகிய மாநிலங்கள் 01. 03. 21 முதல் உணவங்கள் திறப்பதற்கு வேண்டுகை விடுத்துள்ளது.
     
    சுவிஸ் விருந்தோம்பல்துறையின் சம்மேளனம் மற்றும் சுவிசின் வலது சாரிக் கட்சியான எஸ்.வி.பி ஆகியன 01. 03. 21 உணவகங்கள் திறக்க உரிய நடவடிக்கையினை சுவிஸ் அரசு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகை வைத்துள்ளன.
     
    லுட்சேர்ன், சுவிச், நிட்வல்டென் ஆகிய மாநிலங்கள் தற்போது நடுவனரசு அறிவத்ததைப்பார்கவும் விரைந்து உணவங்கள் திறக்க ஒப்புதல் அளிக்க தளர்வினை சுவிஸ் அரசு அறிவிக்க வேண்டி உள்ளன.
     
    சுவிச் மற்றும் நிட்வல்டென் மாநிலங்கள் உரிய காப்பமைவுடன் உணவங்கள் முழுவீச்சாக தொழிற்படலாம் எனக் கருத்தினை தெரிவித்துள்ளன.
     
     
    பாராளுமன்ற ஆணைக்குழுவின் ஊக்கம்
     

தொகுப்பு: சிவமகிழி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment