01. 03. 21 முதல் சுவிசின் முடக்கத் தளர்வு

 கடந்த 18. 01. 2021 முதல் நடைமுறைக்குப்படுத்தப்பட்ட இறுக்க நடவடிக்கைகள் சிலவற்றை தளர்த்தும் அறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என முன்னரே சுவிசரசு அறிவித்திருந்தது. இதன்படி 24. 02. 2021 புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுவிற்சர்லாந்து நாட்டின் அதிபர் திரு. குய் மார்மெலின் மற்றும் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே ஆகியோர் பங்கெடுத்து 01. 03. 2021 முதல் நடைமுறைக்கு வரும் தளர்வுகளை அறிவித்தனர். 

மேலும்

மக்களிடம் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் வினயமான கோரிக்கை.

யாழ் நகரை ஊடறுத்து செல்லும் பிரதான வெள்ள வாய்க்காலை ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பின்னர் தூர்வாரும் பெரும் முயற்சிக்கான முன் ஆயத்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனை நானும் வரதராஜன் பார்த்தீபனும் நேரில் சென்று பார்வையிட்டோம்.

மேலும்

சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறை (IIIM) உருவாக்குதல் போன்றவற்றை வலியுறுத்தி. ICPPG சாகும் வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம்.

பிரித்தானியாவினால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறை (IIIM) உருவாக்குதல் போன்றவற்றை கட்டாயமாக உள்ளடக்க வேண்டும் எனக் கோரி சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ICPPG தெரிவிப்பு.

மேலும்

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸும் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

இன்று யாழ் நூலகத்தில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸும் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

மேலும்

தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 17ம் (24.02.2021) நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.

இன்று 24.02.2021 தமிழின அழிப்பு சார்ந்த விடயங்கள் ஐ.நா சபையில் விவாதிக்க இருக்கும் சம நேரத்தில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) உணவுத்தவிர்ப்பு போராட்டமானது எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினையும் தமிழீழமே நிரந்தர தீர்வு எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி 3ம் நாளாக விடுதலை ஓர்மத்தோடு தொடர்கின்றது.

மேலும்