கடற்கரும்புலி லெப்.கேணல் கலைச்செல்வன்/சபீன் வீரவணக்க நாள்

17.09.2006 அன்று சிறிலங்கா கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் அந்தணன், லெப்.கேணல் விதுசன், லெப்.கேணல் கலைச்செல்வன் மற்றும் லெப்.கேணல் வெற்றியரசன், லெப்.கேணல் நான்முகன் உட்பட்ட கடற்புலிகளினதும் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மூன்றாம் நாள்.

காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் இரண்டாம் நாள்….!

இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

மேலும்

ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் பேரணியும் போராட்டமும்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, நீண்ட கால இடைவெளிக்கு பின், ஐ.நா முன்றலில் பேரணியும் போராட்டமும் 15.09.2025 அன்று தமிழ் இளையோர் அமைப்பின் தலைமையில் நடைபெற்றது.

மேலும்

தியாக தீபம் திலீபன் – முதலாம் நாள்

1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி. இது திலீபனுடன் முதலாம் நாள். தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்.

மேலும்

1987 செப்டம்பர் 14 ஆம் நாள் காலை அன்று காலை தமிழீழத்தில் தியாக தீபம்..

‘மன்மதன் இல்லம்’ என அழைக்கப்பட்ட தலைவரின் அலுவலக வளாகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தீலீபனும், அவரோடு 90 க்குப் பின்னர் சில வருடங்கள் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக செயற்பட்ட ராஜனும் வாகனத்தில் இருந்து இறங்கி வந்தார்கள்.1987ஆகஸ்ட் 15 ஆம் நாள் தமிழ் நாட்டில் இருந்து இந்திய விமானத்தில் சென்று இறங்கிய காசி அண்ணாவும் நானும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தோம். தலைவர் அவர்களது அலுவலகப் பணிகள் எம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தன. திலீபனின் வருகையை தலைவருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து திலீபன் உள்ளே அழைக்கப்பட்டார். காசியண்ணா மற்றும் எங்களோடு ராஜன் பேசிக் கொண்டிருந்தார்.

மேலும்

பிரான்சில் தமிழ்த் தேசிய மாவீரர் நாள்- 2025 பங்களிப்பு அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு

விழுந்தவர்கள் எல்லாம் விதையாகிப்போனதால் தான் விடுதலைப்போர் இன்னும் தொடர்கின்றது.’’ அந்த உன்னதர்கள் தான் எம்மண்ணின் மான மாவீரர்கள். அவர்களை நெஞ்சில் சுமந்து வரும் நாம் ஆண்டு தோறும் அவர்களின் நாளான நவம்பர் 27 ஆம் நாளில் சுடர் ஏற்றி கார்த்திகை மலர் கொண்டு வணக்கம் செலுத்துகின்றோம்.

மேலும்