சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் அவர்களுக்கு மட்டக்களப்பு கொக்குவி
ல் பிரதேச பொலிசாரி
னால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
நேற்று 17.04.2025 பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் பொலிசார் இருவரினால் எதிர்
வரும் 19.04.2025 அன்று காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அன்னை பூபதி அவர்களது நிணைவு தொடர்பான விசாரணைக்கு வருமா
று காத்தான்குடி மற்றும் கொக்குவில் பொலிசாரி
னால் கையொப்பமிடப்ப
ட்ட கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி கடிதமானது சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதன்மூலம் தனது மொழி உரிமை மீறப் பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவரான ச.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் எதிர்வரும் 19.04.2025 அன்னை பூபதி அவர்களின் இறுதி நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில் மேற்படி விசாரணைகள் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

