அனைத்துப் பெண்களுக்கும்இனிய மகளிர் வாழ்த்துகள்!

1 0
Read Time:2 Minute, 6 Second

நீங்கள் சிந்திய குருதி வீண் போகாது!
செந்தமிழ் மண் அடிமையாக வாழாது!
விடியல் பொழுதின் வீரிய தோழ்களே!
மேதகு பிரபாகரனின் கூரிய வேல்களே!
பெண் அடிமையை உடைத்தெறிந்த
அன்றில் பறவைகளே!
இந்த வானம் எல்லையற்றது!
உங்கள் சிறகுகள் வலிமையானது!
இன்னும் இன்னும் உயரப் பறவுங்கள்!
அடிக்க நீளும் கைகளை
உடைத்து வீசுங்கள்!
காற்று உங்களை அறியும்!
கடலும் உங்களை அறியும்!
நீல வானுக்கும் உங்களைத் தெரியும்!
நிலவும் உங்களை விரும்பும்!

வல்லரசுப் படைகளை
வறுத்தெடுத்த மாலதிகளே!
சோர்வின்றிக் களத்தில் நின்ற
வீரம் மிகு சோதியாக்களே!
ஆழக் கடலில் நீந்திச் சென்று
அந்நியக் கப்பல்களை அழித்த
அங்கயற்கண்ணிகளே!
படைக் குகைகள் புகுந்து
ஆட்லறிகள் அழித்த யாழினிகளே!
சிங்கக் குகைக்குள் புகுந்து
சீறி நின்ற சிறுத்தைகளே!

உறக்கம் இனியும் வேண்டாம் தோழிகளே!
இரக்கமற்ற பகைவர் எங்களை
மரியாதையுடன் வாளவிடமாட்டார்!
நன்றாக உணருங்கள்…
உங்களின் விடுதலை
உங்களின் கையிலே உள்ளது!
விரைந்து எழுங்கள் விடியல் படைப்போம்!
இன்னொரு தலைமையை
எதிர் பார்க்கவேண்டாம்!
நீங்களே தலைமை தாங்குங்கள்!
உங்களால் முடியும்!
தமிழீழ விடுதலை படைக்க
உங்களால் முடியும்!

நெருப்புப் பெண்களே!
நேரிய கண்களே!
அடிமையைத் தகர்த்திடுங்கள்!
கொடுமையை எரித்திடுங்கள்!
விடியல் படைத்திடுங்கள்!
எங்கள் வீரங்களே எழுந்திடுங்கள்!
சி. செ. புலிக்குட்டி
08.03.2026

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment