தேடுதல் தேவையில்லை திரும்பும் திசையெல்லாம்அண்ணன் முகம்
தேடுதல் தேவையில்லை
திருவுருவாய் நெஞ்சறையில்
அண்ணன் பதி
தேடுதல்தேவையில்லை
திடமான செயல்களில்
அண்ணன் குரு
தேடுதல்தேவையில்லை
விடுதலைவழியில்
அண்ணன் ஒளி
தேடுதல்தேவையில்லை
கடும்பணியிடை
அண்ணன் விசை
தேடுதல்தேவையில்லை
தேன்தமிழ் மொழியில்
அண்ணன் அரண்
தேடுதல் தேவையில்லை
திக்கற்றவர்களுக்கு
அண்ணன் வரன்
தேடுதல் தேவையில்லை-இவ்
வையம்மீதில்
அண்ணன் நீர்
தேடுதல் தேவையில்லை நீ
தலைநிமிர்கையில்
அண்ணன் வான்
தேடுதல் தேவையில்லை
மூச்சிழுக்கும்போதில்
அண்ணன் வளி
தேடுதல் தேவையில்லை
கூடாச்செயல்அழிகையில்
அண்ணன் தீ
தேடுதல் தேவையில்லை
வாடியபொழுதினில்
அண்ணன் நிலம்
தேடுதல் தேவையில்லை நீ
சரியாக ஒழுகிட
அண்ணன் உளி
தேடுதல் தேவையில்லை நீ
தவறிழைக்கநினைத்தால்
அண்ணன் களி
தேடுதல் தேவையில்லை
கண்மூடித்தொழுதிட
அண்ணன் இறை
தேடுதல் தேவையில்லை
தினம் நீ எழுந்திட இசைக்கும்
அண்ணன் பறை -அண்ணனைத்தேடுதல் தேவையில்லை
தினமும்நினை-அவர்
பெயரை உரை
கவியாய் வரை
கலையாய்ப்படை
உன்னுள்ளே அவனேஎன்பாய்
உன்னருகில் அவனே என்பாய்
உலகெலாம் அவனே என்பாய்
தேடுதல் தேவையில்லை
எங்கும் அண்ணனே நிறைவான்
எதிலும் அண்ணனே தெரிவான்.
வென்றிட வழியைத்தருவான்
விரைந்திட வலுவும்தருவான்
எங்கும் அண்ணனே இறை
எம்மைச்செதுக்கும் இசை.
அரியாத்தை
26.11.2025
