தமிழீழத் தலைநகர் திருக்கோணமலையில் மாவீரர்களது பெற்றோர்களுக்கு பிரமாண்டமான மதிப்பளிப்பு நிகழ்வு.

0 0
Read Time:4 Minute, 50 Second

தமிழீழத் தலைநகர் திருக்கோணமலையில் மாவீரர்களது பெற்றோர்களுக்கு பிரமாண்டமான மதிப்பளிப்பு நிகழ்வு.

தாயக விடுதலைப் போரில் தமது இன்னுயிரை ஈந்து வீரகாவியமான மாவீரர்களது பெற்றோர்கள், உரித்துடையோர்களை, தமிழீழத் தலைநகர் திருக்கோணமலையில் கௌரவிக்கும் நிகழ்வானது,
*புலம்பெயர் உணர்வாளர்களினதும்

  • புலம்பெயர் மாவீரர் உரித்துடையோரினதும்
    நிதிப்பங்களிப்பு, மற்றும்,
  • தாயக உணர்வாளர்களினதும்,
  • தாயக மாவீரர் உரித்துடையோரினதும் இரவு பகல் பாராத, தன்னலம் கருதா, அயராத பாடுபடலுடனும்,
    மிகப் பிரமாண்டமான முறையில் இன்றைய தினம் (22/11/2026) திருக்கோணமலை உப்புவெளி பிரதேச சபைக் கலாச்சார மண்டபத்தில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினது ஒழுங்கமைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
    திருக்கோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்,
  • மாவீரர் பெற்றோர்கள்,
  • உரித்துடையோர்கள்,
  • உணர்வாளர்கள்,
  • அரசியல் பிரமுகர்கள் என,
    750 இக்கும் மேற்பட்டோர், விசேட பேருந்து ஏற்பாடுகள் மூலமாகவும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
    வருகைதந்த மதிப்பார்ந்த அனைவரையும் ஒன்றுகூட்டி, அலஸ்தோட்டம் வைரவர் ஆலய முன்றலிலிருந்து,
    *தவில் நாதஸ்வரக் கலைஞர்களினதும்,
  • Band வாத்தியக் கலைஞர்களினதும்
    வரவேற்பு இசையுடன்,
    உப்புவெளி கலாச்சார மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
    அதனைத் தொடர்ந்து மாவீரர்களது பொதுப் படத்துக்கான மலர் மாலையை மாவீரர்களின் பெற்றோர்கள் இருவரினால் அணிவிக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
    தொடர்ந்து, வீரத்தளபதி லெப்.சீலன் அவர்களின் மருமகளினால் பொதுச்சுடர் ஏற்றப்பட, மாவீரர்களுக்கு மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
    தொடர்ந்து பல அரங்க நிகழ்வுகள் அரங்கேற்றப் பட்டது.
    அடுத்த நிகழ்வாக, மாவீரர் பெற்றோர்களுக்கான மதிய விருந்துபசாரம் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
    ஒரு இனத்தின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வின் பெரும் வலியைச் சுமந்து நிற்கும் பெற்றோர்களையும், உறவுகளையும் மதிப்பதும், அவர்களின் தியாக உணர்வையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்வதும் எம் அனைவரினதும் தார்மீகக் கடமையாகும்.
    காலங்கள் கடந்தாலும் ஆறாத வலிகளுடன், தம் பிள்ளைகளின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து வாழும் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோரை மதிப்புடன் கௌரவிக்கும் உன்னத நிகழ்வானது திருக்கோணமலை பட்டணமும் சூழலும் வட்டாரமான உப்புவெளி பிரதேசத்தில் இனிதே இடம்பெற்றது.
    இவ் மதிப்புமிக்க நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு, மாவீரர் பெற்றோர்களுக்கும் உரித்துடையோருக்கும் எமது அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்தினார்கள்.
    ❤️ இது வெறும் மதிப்பளிப்பு நிகழ்வு மட்டுமல்ல; வலிகளைக் கடந்து வாழும் இதயங்களுக்கு நாம் வழங்கும் அன்பின் அங்கீகாரம்!
    🌹 அவர்களின் தியாகத்தை மதிப்போம்!
    🌹 அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்!
    🌹 அவர்களுடன் அன்போடும் ஆதரவோடும் கரம் கோர்ப்போம்!
    நினைவுகள் அழிவதில்லை… தியாகங்கள் மறக்கப்படுவதில்லை…
    🌺 மதிப்பளிப்போம்… மனிதநேயத்துடன் ஒன்றிணைவோம்!
    🌺 மனிதநேயமும், நன்றியும் மறவாதசமூகமாக உயர்வோம்.
    இந்நிகழ்வில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள் உணர்வாளர்கள் அரசியல் பிரமுகர்கள் போன்றோர் நினைவுரையாற்றலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.
    நன்றி
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment