இவர்டோன் நகரில் நடுகல் வழிபாடு 2026

0 0
Read Time:2 Minute, 16 Second

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவைப் போற்றும் வகையில், மாவீரர் வாரத்தின் முதல் நாளில், சுவிஸ் நாட்டின் வோ மாநிலத்தில் அமைந்துள்ள இவர்டோன் நகரில் மாவீரர் நினைவுக்கல்லுக்கு நடுகல் வழிபாடு நடைபெற்றது.

தமிழீழ விடுதலைக்காகவும், தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, இறுதிவரை போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூரும் வகையில், 21.11.2026 சனி மாலை 17:30 மணியளவில், சுவிஸ் நாட்டின் வோ மாநிலத்தின் இவர்டோன் நகரில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவுக்கல்லுக்கான நடுகல் வழிபாடு இடம்பெற்றது. இந்நிகழ்வில் உறவுகளும், உணர்வாளர்களும், போராளிகளும் கலந்துகொண்டனர்.

மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான நவம்பர் 21 அன்று, தமிழீழத் தேசியத் தலைவரால் தமிழீழத் தேசியக் கொடியாகப் பிரகடனம் செய்யப்பட்டு, அவரது பாசறையில் ஏற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், தமிழீழத் தேசியக் கொடிகளுடன் மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி நடுகல் வழிபாடு செய்யப்பட்டது.

இவ்வாண்டுக்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள், எதிர்வரும் டிசம்பர் 27 அன்று 12.30 மணிக்கு பாசல் மாநிலத்தின் மிகப்பெரிய அரங்கமான Messe Nord இல் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. மானமாவீரருக்கு வணக்கம் செலுத்தி, உறுதி எடுக்க, தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் அணிதிரண்டு வருகை தருமாறு உரிமையோடு அழைக்கின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

தமிழீழத் தேசிய மாவீரர் பணிமனை சுவிஸ் கிளை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment