திலீபம் எனும் அகராதி கற்றுத்தரும்பாடங்கள்.வியப்பு-12

0 0
Read Time:12 Minute, 52 Second

“திலீபன்” என்ற பெயரை உச்சரிக்கும் ஒவ்வொருதடவையும் உள்ளம் வலிதாங்கும் உணர்வில் சிலிர்த்துப்போகிறது .”பசிவந்தால் பத்தும் பறக்கும் ” என்ற முதுமொழி அர்த்தமற்றதாகிறது.
உயிரைப்பிழிந்து கணங்கணமாய்ச் சாவிலே ஊற்றி, ஈகத்தையே மலைக்கவைத்த ஒரு உண்மை மனிதனாகத் திலீபனண்ணா மனங்களில் நிலைத்துவிட்டார்.வார்த்தைகளில் வடித்துவிடமுடியாத வரலாறு திலீபனண்ணா.அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வியப்பான, அவசியம்மிக்க பாடங்கள் ஏராளம்.அவற்றில் சில இதோ…

வியப்பு-12
நம்பிக்கை:

தமிழீழத்தேசியத் தலைவர்மேல் மதிப்பும் மரியாதையும் கொண்ட போராளியாகச் செயற்பட்ட திலீபனண்ணா தலைவர் அவர்களின் அன்புக்கும் பெருநம்பிக்கைக்குப்ம் பாத்திரமானவர்.தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைகளை ஏற்று அவற்றின்படி நெறிதவறாத விடுதலைப்போராளியாக வாழ்ந்து தனது இனத்திற்காகத் தன்னை ஈந்தவர். எல்லாவகையிலும் சிறந்த ஒரு மனிதனாக, வீரனாக,ஞானியாகத் திலீபனண்ணா திகழ்கிறார்.
திலீபம் எனும் அகராதி கற்றுத்தரும்
பாடங்கள்.

வியப்பு -1
துணிவு:
“எண்ணித்துணிகருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு “
என்ற வள்ளுவரின் வாக்கைச் செயலிற் காட்டியவர் திலீபன் அண்ணா.அப்போதைய சூழலில் ஒரு உண்ணாநிலைப் போரின் அவசியத்தைப்பற்றிக் தலைவர் அவர்கள் கூறும்போது அதனை உணர்ந்துகொண்டு தானே முன்வந்து உண்ணாது, நீர்கூட அருந்தாது நோன்பை ஏற்றார். துணிவைத்துணைகொண்ட அவர் தனது செயலை முழுமைப்படுத்தினார். அந்தத்துணிவு எமக்கெல்லாம்ஒரு பாடமாகும்.

வியப்பு-3 மனவுறுதி:
இலட்சியம் தமிழீழவிடுதலை ஒன்றே,அதற்காகச் செய்யப்படும் காரியங்களில் பின்வாங்குவது என்பது புலிகளின் வரலாற்றில் இல்லை.திலீபனண்ணா அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. தனது மருத்துவபீடக்கற்கைநெறியை உதறிவிட்டு உறுதியுடன் விடுதலைப்புலியானவர்.தமிழீழத்தாயகம் இலங்கை இந்திய நாசகாரச் சூழ்ச்சியால் அழிக்கப்படப்போவது கண்டு இந்தியாவின் கபடநாடகத்தை உலகிற்குக்காட்ட உண்ணாநிலை அமைதிப்போரை நடத்த முன்வந்தார்.உணவு,நீர் இரண்டும் இல்லாது ஒருவர் வாழவேமுடியாது என்பதே உண்மை.அந்த உண்மை அடிபட்டுப்போயிற்று.

பசி தாகம் தீயாக உடலை உருக்கித் தாங்கொணா வேதனையைக்கொடுத்தபோதும் திலீபனண்ணா உறுதியாகவே இருந்தார்.தானே நினைவிழந்து தண்ணீர்கேட்டாலும் யாரும் தரவே கூடாது என அறுதியாகக்கூறியிருந்தார். மெல்லமெல்லச் செத்துக்கொண்டிருந்தபோதும் மனவுறுதியை இழக்கவேயில்லை.உறுதி தனது இலக்கணத்தைத் “தில…

வியப்பு- 4 பிறர்நலன்பேணல்:
மனிதர்கள் சாதாரணமாக முதலில் தத்தமது சுயநலன்களையே கருத்திற்கொள்வர்.மற்றவரைப்பற்றி எண்ணிப்பார்ப்பது மிகமிகக்குறைவு. திலீபனண்ணா அதற்கு முற்றிலும் மாறுபட்ட மாண்பு மிக்கவர்.தன்னைப்பற்றி எள்ளளவும் கவலைகொள்ளாமல் பிறர்நலனே, அதாவது மக்கள் நலனே தன்னலம் என்று செயலால் உணர்த்திய பெரியமனதுக்காரர். மக்களுக்காக வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வலியைத் தாங்கியபடியே அவர்களுக்காக மடிந்துவிட்ட மாவீரன்.
ஒரு சிறிய பொருளை மற்றவருக்குக்கொடுக்க ஒருநூறுதடவைகள் யோசிக்கும் நாம் உயிரையே எமக்காக விட்டுவிட்ட திலீபனண்ணாவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டயவை ஏராளம்.

வியப்பு- 5 அன்பு:
எந்தவொரு எதிர்பார்ப்புமில்லாத பேரன்பை மற்றவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும்
மனப்பாங்கு கொண்டவர்களைக் காண்பது அரிது.ஆனால் அன்பிற்காக உயிரையே தருகின்ற பண்பினைத் தமிழீழத்திற்தான் காணமுடியும். திலீபனண்ணா தன்னை ஈன்ற மண்ணின்பால், மக்களின்பாற்கொண்ட அன்பின் உச்சம் உயிரையே கொடுக்குமளவிற்கு உயர்ந்தது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு” என்ற குறளின் விளக்கத்தை எங்கும் தேடத்தேவையில்லை.”திலீபன்” எனும் ஒற்றைச்சொல்லில் அது அடங்கிவிட்டது.
உயிரைக்கொடுத்தபின்பும் இன்னும் என்ன இருக்கிறது கொடுக்க? என எண்ணத்தோன்றும்.ஆனால் திலீபனண்ணா கொடுத்தாரே. யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் கற்கைநெறிக்காக தனது உயிரற்ற உடலைக்கொடுத்தாரே. “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு ” அவரின் பேரன்பிற்கு தமிழீழ விடுதலை ஒன்றைத் தவிர வேறெதுவும் ஈடாகாது.

வியப்பு -6 தெளிவு:

சிறு வயதில் போராட்டத்துடன் தன்னை இணைத்திருந்தாலும் எதற்காகத் தமிழீழவிடுதலைப்போராட்டம் ஆரம்பமானது,தமிழர்களின் தேவை என்ன, இப்போராட்டத்தில் ஒவ்வொரு தமிழனின் பங்கும் ஏன் அவசியம் என்ற கேள்விகளுக்கான பதில்கள் அவரிடம் மிகத்தெளிவாகவே இருந்தன. தான் தன்னுடைய பங்களிப்பை முழுமையாகக் கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். “கல்வி போராட்டத்தின் கவசம்,போராட்டம் கல்வியின் காப்பரண்”என்பது திலீபனண்ணாவிற்கு நன்கு தெரியும்.ஆயினும் அக்காலப்பகுதியில் விடுதலைக்காகப் போராடும் போராளிகளின் தேவை முதன்மையாக இருந்ததால் திலீபனண்ணா முழுமையான விடுதலைப்போராளியாகத் தன்னை மாற்றிக்கொண்டார்.சிறந்த மக்கள் தொண்டனாக மக்களின் மனங்களை வென்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ்மாவட்ட அரசியற்றுறைப் பொறுப்பாளராகப் பணிசெய்தபோது யாழ் மாவட்டம் எங்கும் மக்கள் சந்திப்புகளில் அவர் …

வியப்பு-7 செயலாற்றல்:

“சொல்லுக்குமுன் எப்பொழுதும் செயல் இருக்கவேண்டும்.செயலால் வளர்ந்தபின்பே நாம் பேசத்தொடங்கவேண்டும்” என்பது தமிழீழத்தேசியத்தலைவரின் கூற்று.திலீபனண்ணாவின் செயல் பேசிற்று. இந்திய அரசின் கபடத்தனத்தை உடைத்துப்போட்டது. “அமைதிப்படை”என்ற போர்வையில் எம் தாயகத்தில் வந்து குந்தியிருந்த இந்தியப்படையின் வேடத்தைக் கலைத்தது.முகத்திரையைக் கிழித்தெறிந்தது. செயற்கரிய செயலைத் தன் ஆற்றலால் நெறிப்படுத்திச் செயற்படுத்திவிட்டு விண்ணேகிவிட்டார் திலீபனண்ணா. இன்றும் அவர் செயல்பேசுகிறது. இனியும் இனியும் பேசும்.

வியப்பு -8 புரட்சியாளன்:

உரிமைகள் பறிக்கப்படும்போது எனக்கென்ன எனப்பார்த்துக்கொண்டிருக்காமல் சிக்கலான சூழ்நிலைகளையும் தனது புரட்சிகரச்சிந்தையால் மாற்றியமைக்கும் வல்லமைகொண்டவர் திலீபனண்ணா.மக்களின் மனங்களில் புதிய ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தி தாயகவிடுதலை நோக்கி அவர்களை விரைவுபடுத்தினார். “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் ” என்று முழங்கிய பெரும் புரட்சியாளன் திலீபனண்ணா.
திலீபனண்ணாவின் பசித்தீ இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. தாகக்கனல் குமுறிக்கொண்டிருக்கிறது.தமிழீழவிடுதலை கிடைக்கும்வரை அவை அடங்கப்போவதில்லை .

வியப்பு-9 கடமைதவறாமை;

திலீபனண்ணா தனது விடுதலைப்பயணத்தில் தான் பொறுப்பேற்ற கடமைகளிலிருந்து ஒருபோதும் விலகியதில்லை. அகிம்சைப்போரிற் குதிக்குமுன் அவர் இலங்கை இராணுவத்தினருடனான சமர்க்களதங்களிற் பங்கேற்றுத் திறம்படச்செயற்பட்டவர். இதன்போது ஒருமுறை தனது வயிற்றிலே விழுப்புண்ணடைந்தார்.அவரின் குடலிலே சிறுதுண்டு வெட்டிஅகற்றப்பட்டநிலையிலும் மீண்டும் விரைந்து தனது பணிகளை மேற்கொண்டார்.கடமை தவறாத வீரனாக,
ஈகப்போரின் அகராதியாக, எமக்கெல்லாம் வழிகாட்டியாகத் திலீபனண்ணா என்றென்றும் வாழ்வார்.

வியப்பு-10 முற்போக்குச்சிந்தை:

இளம்வயதிலேயே அறிவின்முதிர்ச்சிமிக்க நல்லபல எண்ணங்கள் திலீபனண்ணாவிடமிருந்ததன.அவற்றிலொன்றுதான் பெண்விடுதலைக்கான தேவைபற்றிய புரிதல். பெண்விடுதலையும்,சமூகவிடுதலையும் ஒருங்கே அடையப்பெறும்போது தாயகவிடுதலை முழுமை பெறும் என்ற தமிழீழத்தேசியத்தலைவரின் எண்ணத்தைச் செயல்வடிவமாக்க முனைந்தார் திலீபனண்ணா.”சுதந்திரப்பறவைகள்”என்ற அமைப்பை உருவாக்கி பெண்களைச் சுதந்திரமான எழுச்சிக்குத்தயாராக்கினார்.அவ்வாறு ஆரம்பமான பெண்களின் புரட்சி வரலாறு உலகம் காணாப் பெண்மையின் உயர்வை,வீரத்தை,சாதனையை,ஈகத்தைத் தமிழீழத்தில் நிலைநாட்டிற்று.வியப்பின் உச்சியில் எழுதப்படும் தமிழீழப்பெண்களின் காவியம் திலீபனண்ணாவின் பெயரை என்றென்றும் சொல்லிநிற்கும்.

வியப்பு-11 ஈகம்:
எண்ணத்திற்கு அப்பாற்பட்ட , யாராலும் நினைத்துக்கூடப்பார்க்கமுடியாத ஓர் அமைதிவழிப்போரைத் திடமான மனதுடன் முன்னெடுத்து ஈகத்திற்கே இலக்கணம் வரைந்தவர் திலீபனண்ணா.அணுவளவும் தயக்கமின்றி பசிநெருப்பைத் தன் வயிற்றிலேந்தினார்.தாகக்கனலைத் தன்னுடலிற்தாங்கினார். தன்னை மிகவருத்திச் சாவுக்கே சவாலானார்.ஈகம் தன்னைச் சரிபார்த்துக்கொண்டது.தமிழினவிடுதலைக்காக ஈகவேள்வியில் தேகம் ஊற்றி எரிந்தது திலீப விளக்கு. தமிழீழம் விடியும்வரை திலீபனண்ணாவின் ஈகம் எழுச்சியுடன் போராடிக்கொண்டேயிருக்கும்.


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment