திலீபனே, தோழனே!

1 0
Read Time:2 Minute, 56 Second

திலீபனே, தோழனே!
எங்கள் தேசத்தின் வீரனே!
உன் ஈகம் சொல்ல வார்த்தைகள் இல்லை!
உன் நினைவைச் சுமக்க
நெஞ்சம் போதவில்லை!
உன் கனவைச் சுமக்கும்
எங்கள் கால்கள் சோரவில்லை!
எந்தப் படைக்கும் நாங்கள் பணிந்ததில்லை!


இனத்தின் வாழ்வையே நேசித்தாய்!
உயிரை அதற்கே கொடுத்தாய்!
பன்னிரண்டு நாள்கள் பட்டினி இருந்தாய்!
சொட்டு நீருமின்றிச் சுருண்டு கிடந்தாய்!
பாரதம் கண் திறக்கவில்லை!
அந்தப் பாவிகள் மனம் துடிக்கவில்லை!
சில நாட்களில் விட்டுவிடுவான்
பட்டினிப்போரை
நாம் தொடுப்போம் புலிகள் மீது போரை
என நினைத்தோர் முகத்தில்
ஓங்கி அறைந்தான் எங்கள் தோழன்!
திலீபன் மேதகு பிரபாகரனின்
நம்பிக்கையான வீரன்!
நீ விட்டுச் சென்ற பாதையில்
நாங்கள் இன்னும் நிமிர்ந்து நிற்கிறோம்!
விழுந்தாலும் மீண்டும் எழுவோம் என்று,
உன் நினைவோடு உறுதி செய்கிறோம்!

உன் உயிரின் விலை அளக்கமுடியாது!
உன் ஈகத்தை எண்ணிப் பார்க்கமுடியாது!
உன்னைப் போற்றும் ஒவ்வொரு வாய்களும்
விடுதலைப் பாடல் பாடும்!
உன் ஈகத்தைச் சுமந்த ஒவ்வொரு இதயமும்
விடுதலைக்காய் அணிவகுக்கும்!
கண்ணீரை மறைத்து உறுதியாய் நின்றவனே!
காயங்கள் மறைத்துக் கடமைகள் செய்தவனே!
உறங்காது விழித்திருந்து உரிமை கேட்டவனே!
உறுதியோடுரைக்கிறோம் உனக்கு
கேட்டுக்கொள் திலீபமே ஈகமே…
நாங்கள் தலைகள் குனியவில்லை!
விலைகள் போகவில்லை!
காலம் மாறலாம்
காட்சிகள் மாறலாம்
ஆனால்,
நாங்கள் கொண்ட கொள்கை
என்றுமே மாறாது!

உன் நினைவை என்றும் சுமக்கிறோம்!
விடுதலைக்காய் அணி வகுக்கிறோம்!
தமிழ்த் தேசத் தலைவன்
மேதகு வே.பிரபாகரன் வழியில்
உறுதியுடன் நிற்கிறோம்!
புதையுண்ட விடுதலைத் தேரை
விரைவில் வெளி எடுப்போம்!
போர் தொடுப்போம்!
தமிழீழ நாடு யாருக்கும் பணியாது!
புலிகள் பயணம்
விடுதலை பெறாமல் முடியாது!
இந்த உலகத்தில் தமிழீழம்
விடியாமல் போகாது!
இது உன்மீது உறுதி!
தமிழ் மண்மீது உறுதி!


சி.செ.புலிக்குட்டி
26.09.2026

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment