“திலீபன்” என்ற பெயரை உச்சரிக்கும் ஒவ்வொருதடவையும் உள்ளம் வலிதாங்கும் உணர்வில் சிலிர்த்துப்போகிறது .”பசிவந்தால் பத்தும் பறக்கும் ” என்ற முதுமொழி அர்த்தமற்றதாகிறது.
உயிரைப்பிழிந்து கணங்கணமாய்ச் சாவிலே ஊற்றி, ஈகத்தையே மலைக்கவைத்த ஒரு உண்மை மனிதனாகத் திலீபனண்ணா மனங்களில் நிலைத்துவிட்டார்.வார்த்தைகளில் வடித்துவிடமுடியாத வரலாறு திலீபனண்ணா.அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வியப்பான, அவசியம்மிக்க பாடங்கள் ஏராளம்.அவற்றில் சில இதோ…
வியப்பு-10 முற்போக்குச்சிந்தை:
இளம்வயதிலேயே அறிவின்முதிர்ச்சிமிக்க நல்லபல எண்ணங்கள் திலீபனண்ணாவிடமிருந்ததன.அவற்றிலொன்றுதான் பெண்விடுதலைக்கான தேவைபற்றிய புரிதல். பெண்விடுதலையும்,சமூகவிடுதலையும் ஒருங்கே அடையப்பெறும்போது தாயகவிடுதலை முழுமை பெறும் என்ற தமிழீழத்தேசியத்தலைவரின் எண்ணத்தைச் செயல்வடிவமாக்க முனைந்தார் திலீபனண்ணா.”சுதந்திரப்பறவைகள்”என்ற அமைப்பை உருவாக்கி பெண்களைச் சுதந்திரமான எழுச்சிக்குத்தயாராக்கினார்.அவ்வாறு ஆரம்பமான பெண்களின் புரட்சி வரலாறு உலகம் காணாப் பெண்மையின் உயர்வை,வீரத்தை,சாதனையை,ஈகத்தைத் தமிழீழத்தில் நிலைநாட்டிற்று.வியப்பின் உச்சியில் எழுதப்படும் தமிழீழப்பெண்களின் காவியம் திலீபனண்ணாவின் பெயரை என்றென்றும் சொல்லிநிற்கும்.
கலைமகள்
