“திலீபன்” என்ற பெயரை உச்சரிக்கும் ஒவ்வொருதடவையும் உள்ளம் வலிதாங்கும் உணர்வில் சிலிர்த்துப்போகிறது .”பசிவந்தால் பத்தும் பறக்கும் ” என்ற முதுமொழி அர்த்தமற்றதாகிறது.
உயிரைப்பிழிந்து கணங்கணமாய்ச் சாவிலே ஊற்றி, ஈகத்தையே மலைக்கவைத்த ஒரு உண்மை மனிதனாகத் திலீபனண்ணா மனங்களில் நிலைத்துவிட்டார்.வார்த்தைகளில் வடித்துவிடமுடியாத வரலாறு திலீபனண்ணா.அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வியப்பான, அவசியம்மிக்க பாடங்கள் ஏராளம்.அவற்றில் சில இதோ…
வியப்பு-11 ஈகம்:
எண்ணத்திற்கு அப்பாற்பட்ட , யாராலும் நினைத்துக்கூடப்பார்க்கமுடியாத ஓர் அமைதிவழிப்போரைத் திடமான மனதுடன் முன்னெடுத்து ஈகத்திற்கே இலக்கணம் வரைந்தவர் திலீபனண்ணா.அணுவளவும் தயக்கமின்றி பசிநெருப்பைத் தன் வயிற்றிலேந்தினார்.தாகக்கனலைத் தன்னுடலிற்தாங்கினார். தன்னை மிகவருத்திச் சாவுக்கே சவாலானார்.ஈகம் தன்னைச் சரிபார்த்துக்கொண்டது.தமிழினவிடுதலைக்காக ஈகவேள்வியில் தேகம் ஊற்றி எரிந்தது திலீப விளக்கு. தமிழீழம் விடியும்வரை திலீபனண்ணாவின் ஈகம் எழுச்சியுடன் போராடிக்கொண்டேயிருக்கும்.
கலைமகள்
