தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2026 -சுவிஸ் 

0 0
Read Time:4 Minute, 0 Second

தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளை 35 வது தடவையாக நடத்திய தமிழீழ தேசியமாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 04.07.2026 தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளை 35 வது தடவையாக நடத்திய தமிழீழ தேசியமாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 04.07.2026 சனி அன்று சப்கவுசன் மாநிலத்திலும் , மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி ஞாயிறு அன்று பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்ப் மைதானத்திலும் சிறப்பாக நடைபெற்றது.. பொதுச்சுடர், தேசியக்கொடி,ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தி மலர் வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.காலையில் தொடங்கிய போட்டிகள் மாலை வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.


9,11,13,17,வளர்ந்தோர் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில், இளையோர் பிரிவுகளில் வேற்று இனத்தவர்களும் ஆர்வமுடன் இணைந்து விளையாடி இருந்தனர்.
வளர்ந்தோர் பிரிவில் இம்முறை இதுவரை தமிழீழக்கிண்ணத்துக்கு தகுதி பெறாத பலம்பொருந்திய அணிகள் எல்லாம் இச்சுற்றுப்போட்டியில் வெற்றிபெறுவதனூடாக தாம் தமிழீழக்கிண்ணத்துக்கு தகுதி பெற்று விடலாம் என மூர்க்கத்துடன் மோதின இறுதியில் ஏற்கனவே நான்கு தடவைகள் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கி சாதனை படைத்த சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் இம்முறை வெற்றி பெற்றால் மீண்டும் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வெற்றிக்கிண்ணத்தை பெற்ற சாதனையினை அடைந்திருப்பார்கள் துரதிஷ்டவசமாக இறுதி ஆட்டத்தின் சமநிலை தவிர்ப்பு ஆட்டத்தில் பேர்ண் றோயல் விளையாட்டுக்கழகத்திடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
இச்சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்றதனூடாக றோயல் விளையாட்டுக்கழகம் இரு அடைவுகளை பெற்றுக்கொண்டது.மாவீரர் வெற்றிக்கிண்ணத்தை இம்முறையுடன் சேர்த்து 7 தடவைகள் வென்றதோடு 23 வது தடவையாக தமிழீழக்கிண்ணத்திற்கும் தெரிவாகியுள்ளனர்.
1991 ஆம் ஆண்டு முதலாவது மாவீரர் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிய லவுசான் ப்ளூ ஸ்ரார் விளையாட்டுக்கழகம் இம்முறை சுவிஸ் சம்பியன் ஆனது.
மூன்று தசாப்தங்கள் கடந்தும் மாவீரர்களின் நினைவுகள் உயிர்ப்புடன் இருப்பதை மேற்படி சுற்றுப்போட்டி நினைவூட்டியது.
இறுதியாக வெற்றி பெற்ற கழகங்களுக்கும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதோடு தமிழீழ தேசியக்கொடி கையேற்றலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது
தமிழீழ விளையாட்டுத்துறை
சுவிஸ் கிளை
06.07.2026

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment