சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கேணல் சங்கர்நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2026!(மென்பந்து துடுப்பாட்டம், வளர்ந்தோர் உதைபந்தாட்டம்)

0 0
Read Time:2 Minute, 6 Second

26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 07.06.2026 அன்று பேர்ண் மாநிலத்தில் றுயமெனழசக மைதானத்தில் நடைபெற்றது.


சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட இப் போட்டிகளானது பொதுச்சுடர், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன்;;, ஈகைச்சுடர், அகவணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.
மென்பந்து துடுப்பாட்டம், உதைபந்தாட்டம்; போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் கையேற்கப்பட்டு தாரக மந்திரத்துடன் போட்டிகள்; சிறப்பாக நிறைவடைந்தன.
இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment