Read Time:1 Minute, 16 Second
“கடலில் கரைந்த காலங்களும், வரலாற்றில் தடம் பதித்த நினைவுகளும்” – பாகம் 1 என்ற நூலின் வெளியீட்டு விழா 15 மார்ச் 2026 அன்று நியூசிலாந்தின் மவுண்ட் ரோஸ்கில் போர்வீரர் நினைவக மண்டபத்தில் (Mount Roskill War Memorial Hall) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்ச்சி மாவீரர் வணக்கத்துடன் தொடங்கியதுடன், ஒழுங்காகவும் சிறப்பாகவும் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இவ் வெளியீட்டு விழாவில் கடல்புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் குறித்த கருத்துஉரையை
திருமதி.வித்தியா நந்தகுமார் அவர்கள் சிறப்பாக வழங்கினார்.

இந்த நிகழ்வு, வரலாற்று நினைவுகளைப் பதிவு செய்யும் ஒரு முக்கிய முயற்சியாகக் கருதப்படுவதுடன், சமூகத்தின் பெரும் ஆதரவையும் பெற்றுள்ளது.
























