Read Time:1 Minute, 11 Second
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் (International Institute of Tamil Arts), பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாக நடாத்தும் மதிப்பளிப்பு நிகழ்வு எதிர்வரும் (16.06.2024) ஞாயிற்றுக்கிழமை பி.ப.13.00 மணிக்கு Espace Associatif Des Doucettes 10 Rue Tiers Pot 95140 Garges Les Gonesse என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தில் கலைக்கற்கைகளில் ஆற்றுகைத்தரத்தினை நிறைவு செய்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெறவுள்ள அதேவேளை 2019,2021,2022 ஆண்டுகளில் தமிழ்க் கலைத் தேர்வில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் நடைபெறவுள்ளது என பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.