சுவிசில் நடைபெற்ற கேணல் சங்கர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2022!

0 0
Read Time:4 Minute, 55 Second

26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 04.09.2022 அன்று பேர்ண் மாநிலத்தில் Wankdorf மைதானத்தில் நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட இப் போட்டிகளானது பொதுச்சுடர், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன் ஈகைச்சுடர், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.

மென்பந்து துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடி கையேற்கப்பட்டு தாரக மந்திரத்துடன் போட்டிகள் சிறப்பாக நிறைவடைந்தன.

இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுற்றுப்போட்டி முடிவுகள் 04.09.2022

வளர்ந்தோர்பிரிவு 09 Vs 09

1ம் இடம் றோயல் விளையாட்டுக் கழகம் பேர்ண்
2ம் இடம் யங் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் லீஸ்
3ம் இடம் புளு ஸ்ரார் விளையாட்டுக் கழகம் லவுசான்
இறுதி ஆட்டநாயகன் நெலுக்ஷ்சன் விஸ்வநாதன் றோயல் விளையாட்டுக் கழகம் பேர்ண்
சிறந்த விளையாட்டு வீரர் அன்ரனி கொலின் அலெக்சியஸ் யங் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் லீஸ்
அதிக இலக்குகள் அ.வீரர் நெலுக்ஷ்சன் விஸ்வநாதன் றோயல் விளையாட்டுக் கழகம் பேர்ண
சிறந்த பந்துகாப்பாளர் எழில்செல்வன் பரராஐசிங்கம் றோயல் விளையாட்டுக் கழகம் பேர்ண்

கரப்பந்தாட்டம் ஆண்கள் 5 பேர் கொண்டது

1ம் இடம் கடல் பறவைகள் விளையாட்டுக் கழகம்
2ம் இடம் புளு ஸ்ரார் A விளையாட்டுக் கழகம் லவுசான்
இறுதி ஆட்டநாயகன் பகிரதன் சிவசேனா கடல் பறவைகள் விளையாட்டுக் கழகம்
சிறந்த விளையாட்டு வீரர் யோகானந்தம் செல்வக்குமரன் புளு ஸ்ரார் A விளையாட்டுக் கழகம் லவுசான்

கரப்பந்தாட்டம் ஆண்கள்  4 பேர் கொண்டது

1ம் இடம் பேர்ண் A விளையாட்டுக் கழகம்
2ம் இடம் கடல் பறவைகள் விளையாட்டுக் கழகம்
இறுதி ஆட்டநாயகன் நேசரட்ணம் தனுஐன் பேர்ண் A விளையாட்டுக் கழகம்
சிறந்த விளையாட்டு வீரர் பால்ராஐ; சியாத் கடல் பறவைகள் விளையாட்டுக் கழகம்

மென்பந்து துடுப்பாட்டம்

1ம் இடம் Phonix Boys விளையாட்டுக் கழகம
2ம் இடம் Solothurn Boys விளையாட்டுக்கழகம்;
சிறந்த பந்துவீச்சாளர் கரிகரன் கார்திகேயன் Phonix Boys விளையாட்டுக் கழகம்
சிறந்த துடுப்பாட்ட வீரர் யொசாந் புவனதாஸ் Phonix Boys விளையாட்டுக் கழகம்
சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் கஐP சண்முகநாதன் Phonix Boys விளையாட்டுக் கழகம்
இறுதி ஆட்டநாயகன் யொசாந் புவனதாஸ் Phonix Boys விளையாட்டுக் கழகம்;
தொடரின் நாயகன் திவாகரன் செல்வநாயகம் Solothurn Boys விளையாட்டுக்கழகம்;
சிறந்த பந்து தடுப்பாளர் சபேசன் மகாலிங்கம் Zürich விளையாட்டுக்கழகம்
சிறப்பு பரிசு பிரதீபன் பரமநாதன் Solothurn Boys விளையாட்டுக்கழகம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment